"அனுமதிக்க முடியாது".. சென்னை விமான நிலையத்தில் பிடிஆரை மறித்த பாதுகாப்பு அதிகாரி- பரபரப்பு சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமான நிலைய அதிகாரிகள் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொழில்நுட்ப பொருட்களை அதிகம் பயன்படுத்த கூடியவர். இவர் இரண்டு வாட்ச் கட்டும் பழக்கம் கொண்டவர். அதில் ஒரு வாட்ச் ஸ்மார்ட் வாட்ச்.

அதேபோல் இவர் இரண்டு லேப்டாப் பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர். ஒன்று தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், இன்னொன்று அலுவலக பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடியது.

விமானம்

விமானம்

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு அரசு பயணம் காரணமாக வந்தவர், அங்கு அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டார். இவரின் லக்கேஜ் சோதனை செய்யப்பட்டது. அப்போது இவரின் தனிப்பட்ட பேக்கில் இரண்டு லேப்டாப் இருந்துள்ளது.

அனுமதிக்க முடியாது

அனுமதிக்க முடியாது

இரண்டு லேப்டாப் இருந்த காரணத்தால், அங்கு பிடிஆரை சோதனை செய்த அதிகாரிகள், இரண்டு லேப்டாப்களை அனுமதிக்க மறுத்து உள்ளனர். சிஐஎஸ்எப் அதிகாரிக்கும் பிடிஆருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இதனால் ஏற்பட்டது.

கேள்வி

கேள்வி

இதையடுத்து பிடிஆர் அந்த அதிகாரியிடம், இரண்டு லேப்டாப் எடுத்து செல்ல கூடாது என்று விதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தியில் உடைந்த ஆங்கிலத்தில் அந்த அதிகாரி பேசி உள்ளார். பிடிஆருடன் வந்த இன்னொரு அதிகாரி, அந்த விமான நிலைய அதிகாரியிடம் இந்தியில் விளக்கி இருக்கிறார். ஏன் இரண்டு லேப்டாப்களை அனுமதிக்க முடியாது என்று கேட்டு உள்ளார்.

அமைச்சர்

அமைச்சர்

நான் நிதி அமைச்சர், அரசு ரீதியாக பணி மேற்கொள்கிறேன்.. இரண்டு லேப்டாப் எடுத்து செல்ல கூடாது என்று விதி இருந்தால் காட்டுங்கள் என்று பிடிஆர் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவ விவரம் தெரிந்து உடனடியாக அங்கு விமான நிலைய உயர் அதிகாரிகள் வந்துள்ளனர்.

மன்னிப்பு

மன்னிப்பு

அங்கு வந்த அதிகாரிகள் பிடிஆரிடம் மன்னிப்பு கேட்டனர். தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அதன்பின் உடனடியாக அவருக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமான நிலைய அதிகாரிகள் மறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+