தமிழக அரசின் வரி வருவாய் 52.3% அதிகரிப்பு- நிதி அமைச்சர் பிடிஆர் ஹேப்பி ட்வீட்!
சென்னை: தமிழக அரசின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளதாக கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடக செய்திகளை சுட்டிக் காட்டி தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் வரி வருவாய் தொடர்பாக கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் ஊடகங்கள் இன்று செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில் நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் தமிழகத்தின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வருவாய்:
மாநில சரக்கு சேவைகள் வரி வருவாய் ரூ13,692.84 கோடி
பதிவுத்துறை வருவாய் ரூ4,457.95 கோடி
நில வருவாய் ரூ58.46 கோடி
விற்பனை வரிகள், வர்த்தகம் உள்ளிட்டவை .. ரூ13119.24 கோடி
எக்ஸைஸ் வரிகள் ரூ2594.55 கோடி
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு வருவாய் நிலவரம்:
மாநில சரக்கு சேவைகள் வரி வருவாய் ரூ9224.11 கோடி
பதிவுத்துறை வருவாய் ரூ2,314.46 கோடி
நில வருவாய் ரூ38.07 கோடி
விற்பனை வரிகள், வர்த்தகம் உள்ளிட்டவை .. ரூ9484.81 கோடி
எக்ஸைஸ் வரிகள் ரூ1199.23 கோடி
முந்தைய நிதி ஆண்டின் காலாண்டுடன் ஒப்பீடு:
மாநில சரக்கு சேவைகள் வரி வருவாய் 48.4% அதிகரிப்பு
பதிவுத்துறை வருவாய் 92.6% அதிகரிப்பு
நில வருவாய் ரூ53.5%
விற்பனை வரிகள், வர்த்தகம் உள்ளிட்டவை மூலமாக.. 38.3%
நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வரி வருவாய்: ரூ33923.04 கோடி
முந்தைய நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வரி வருவாய்: ரூ22260.68 கோடி
நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வரி வருவாய் மொத்தமாக 52.3% அதிகரித்துள்ளது.
இந்த ஊடக செய்திகளை தமது ட்விட்டர் பக்கத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்துள்ளார். மேலும் பாஜக என குறிப்பிடாமல் அக்கட்சியை சேர்ந்த ஒருவரது பெயரை குறிப்பிட்டு இத்தகைய அரசின் புள்ளி விவரங்களை கண்டுகொள்ளமாட்டார்கள் எனவும் குட்டு வைத்துள்ளார் நிதி அமைச்சர் பிடிஆர்.
முன்னதாக சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications