என்னாது டீ செலவு மிச்சமா?.. பில் வரட்டும்.. அப்போ தெரியும்.. அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி!
சென்னை: ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை போல் மிச்சம் செய்யப்பட்டதா இல்லையா என்பது பில் வந்தால் தெரிந்துவிடும் என தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்து கட்சியினருக்கு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு தீர்மானம், 7 தமிழர் விடுதலை தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்களை ஆளுநர் ஆர். என். ரவி நிறைவேற்றாததால் அவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டோர் அறிவித்தனர்.

பாமக புறக்கணிப்பு
அது போல் பாமகவும் தேநீர் விருந்தை புறக்கணித்தது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

ஆளுநர் தேனீர் விருந்து
ஆளுநர் தேனீர் விருந்தில் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ளாதது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். அனைத்தும் மக்களின் வரிப்பணம்தான். மக்களின் வரிப்பணம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் மரபு என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள்
இவரது கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஆளுநரின் தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை.
Recommended Video

பில் வரட்டும்
தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. அண்ணாமலை கூறியது போல் செலவு மிச்சம் செய்யப்பட்டதா இல்லையா என்பது பில் வந்தால் தெரிந்துவிடும் என பிடிஆர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பாஜக நிர்வாகிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பல்வேறு விவகாரங்களில் வார்த்தை போர் நீண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!











Click it and Unblock the Notifications