பத்திரமா பார்த்துக்கோங்க.. ஜெயிலரை மடக்கிய பப்ஜி மதன் மனைவி.. "மாட்டுனீங்க".. மிரட்டிய மர்ம பெண் யார்?
சென்னை: புழல் சிறை உதவி ஜெயிலரிடம் பப்ஜி மதன் மனைவி கிருத்திகா பேசும் ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், உதவி ஜெயிலரை பெண் ஒருவர் மிரட்டும் புதிய ஆடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
யூ டியூபில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாடி அதன் மூலம் பல லட்சம் மோசடி செய்ததாவும், பெண்களிடம், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பப்ஜி மதன் மீது புகார் வைக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். குண்டர் சட்டத்தின் கீழ் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சில பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் புகார்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆடியோ வைரல்
இவருக்கு உறுதுணையாக இருந்த அவரின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு தற்போது பெயிலில் வெளியே இருக்கிறார். பப்ஜி மதனுக்கு சிறையில் கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க அவரின் மனைவி கிருத்திகா முயன்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. கிருத்திகா இது தொடர்பாக சிறை அதிகாரி ஒருவருக்கு போனில் பேசுவதாக ஆடியோவாக வெளியாகி உள்ளது. அதாவது என் கணவருக்கு கூடுதல் உதவிகளை செய்து கொடுங்கள்.. உங்களுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சிறைத்துறை அதிகாரியிடம் கிருத்திகா லஞ்சம் கொடுப்பது போல இதில் உரையாடல்கள் பதிவாகி உள்ளன.

அந்த ஆடியோவில்,
கிருத்திகா- நான் கிருத்திகா பேசுறேன்.. பணம் ரெடி பண்ணிட்டு இருக்காங்க.. சேலமில் .. எனக்கு 2 டேஸ் டைம் வேணும்.
போலீஸ் அதிகாரி - ஓகே.. ஓகே பண்ணுங்க.. மதன் சொன்னார்.. நீங்க பணம் ரெடி பண்ணுவதாக
கிருத்திகா - அமவுண்ட் 3 லட்சம்.. அதிகமாக இருப்பதால் கொஞ்சம் நேரம் எடுக்கிறது
போலீஸ் அதிகாரி - ஓகே, ஓகே ரெடி பண்ணுங்க, பரவாயில்லை
கிருத்திகா - பணம் ரெடி செய்யும் வரை அவரை கொஞ்சம் பத்திரமாக பார்த்துக்கோங்க
போலீஸ் அதிகாரி - அவர் நல்லாத்தான் இருக்கிறார்.. கவலை பட வேண்டாம். நீங்கள் பணத்தை ரெடி பண்ணுங்க என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

நடவடிக்கை
பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ தொடர்பாக புழல் சிறையின் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த ஆடியோவில் பேசிய போலீஸ் அதிகாரி செல்வம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீஸ் அதிகாரி செல்வத்தை பெண் ஒருவர் மிரட்டும் ஆடியோவும் வெளியாகி உள்ளது. தன்னை பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு பெண் ஒருவர் போலீஸ் அதிகாரி செல்வத்தை மிரட்டி உள்ளார்.

மிரட்டல்
போலீஸ் அதிகாரி- எனக்கும் கிருத்திகா ஆடியோவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
மர்ம பெண் - சார் நீங்கள் இதுவரை நிறைய தவறு செய்துள்ளீர்கள். ஆதாரம் இல்லாமல் தப்பித்துள்ளீர்கள். ஆனால் இந்த முறை நீங்கள் வசமாக மாட்டி உள்ளீர்கள். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் உங்களின் கெரியரே காலி ஆகிவிடும் என்று அந்த மர்ம பெண் போலீஸ் அதிகாரி செல்வதை மிரட்டி உள்ளார்.

யார் அந்த மர்ம பெண் ?
அதாவது பப்ஜி மதன் மனைவியிடம் போலீஸ் அதிகாரி செல்வம் லஞ்சம் கேட்டது வெளியே தெரிந்தால் அவரின் வேலை போய் விடும் என்று அந்த மர்ம மிரட்டி இருக்கிறார். ஆனால் அந்த மர்ம பெண் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக ஜெயிலர் செல்வம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கூகுள் பேயில் பணம் பெற்றுள்ளார். சிறைத்துறை டி.ஜி.பி. சுனில் குமார் சிங் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications