Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏப்பா,ஆடி நீ விக்கிறது சொகுசு கார் இல்லையாமே.! பப்ஜி மதன் மனைவி பேச்சு..வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்களிடம் சொகுசு கார் இல்லை ஆடி கார் மட்டுமே உள்ளது என ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா கூறியதை ட்விட்டரில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

தான் ப்பஜி விளையாடுவதை இணையத்தில் ஒளிபரப்பி அதன் மூலம் சம்பாதித்து வந்தவர் ஆபாச யூடியூபர் பப்ஜி மதன். இதற்காகவே தனியாக மூன்று யூடியூப் சேனல்களையும் இவர் நடத்தி வந்தார்.

இவர் கேம் விளையாடும் போது, நேரலையிலேயே பெண்களை மிகவும் ஆபாசமாகத் திட்டுவார். பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள், சிறுமிகளைக்கூட இவர் காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டுவார்.

ஆபாச யூடியூபர்

ஆபாச யூடியூபர்

இது குறித்து முதலில் புளியந்தோப்பு சைபர் க்ரைம் பிரிவில் இருவர் புகார் அளித்திருந்தனர். அதன் பின்னர் போலீசார் இந்த விஷயத்தைக் கையில் எடுக்க பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. அப்போது பப்ஜி மதன் தலைமறைவானர். இதில் அவரது மனைவி கிருத்திகாவுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பப்ஜி மதனும் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாடகை வீடு

வாடகை வீடு

இதனால் ஓர் ஆண்டுக்கு அவருக்கு ஜாமீன் கிடைக்காது. அதேநேரம் 9 மாதக் குழந்தையைப் பிரிந்து இருக்கும் மதனின் மனைவி கிருத்திகாவுக்குச் சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிருத்திகா எங்களுக்குச் சொந்த வீடு கூட இல்லை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம் என்று புலம்பித் தள்ளினார். மேலும், தங்களிடம் சொகுசு கார் எதுவும் இல்லை என்று ஆடி கார் மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆடி கார் சொகுசு கார் இல்லை

ஆடி கார் சொகுசு கார் இல்லை

அப்போது செய்தியாளர் 'ஆடி கார் சொகுசு கார் இல்லையா' எனக் கேட்டதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. சொகுசு கார் இல்லை ஆடி கார் மட்டுமே உள்ளது என கிருத்திகா கூறியதை ட்விட்டரில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். பப்ஜி மதன் ஆடி கார் வெச்சு இருக்கும் பரம ஏழை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

ட்வீட்டர்

ட்வீட்டர்

இன்னும் சிலர் ஆடி கார் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, நீங்கள் விற்பது சொகுசு காரே இல்லையாம் பிறகு ஏன் இத்தனை அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் தமிழ்ப்பாடம் சிவா டெம்பிளேட்டை வைத்து, "நாங்க ஏழைங்க.. எங்கள்ட சொகுசு கார் இல்ல Audi கார் தான் இருக்கு" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

அவஞ்சர்ஸ் தொடங்கி குக் வித் கோமாளி வரை அனைத்து டெம்பிளேட்களையும் இப்போது நிரம்புவது பப்ஜி மதன் மனைவியின் ஆடி கார் குறித்த பேச்சு தான். சிறுவர், சிறுமிகளை ஆபாசமாகப் பேசும்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது ஆடி காருக்கு விளக்கம் கொடுக்கும் கிருத்திகாவின் இந்த பேச்சைப் பலரும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

50 லட்ச ரூபாய்

50 லட்ச ரூபாய்

சொகுசு கார்களுக்கு புகழ்பெற்ற ஜெர்மனி நாட்டில் தான் ஆடி காரின் தலைமையிடம் அமைந்துள்ளது. இந்தியாவில் Audi Q2 மாடல் கார் தான் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. அந்த காரின் விலை 35.02 லட்ச ரூபாயாகும். மேலும், பப்ஜி மதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆடி A6 மாடல் காரில் விலை ரூபாய் 54.20 லட்சமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+