பஸ் எண்ணிக்கையை ஒரு பக்கம் குறைத்துவிட்டு.. எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் வாங்கி தந்த விஜய்.. மோசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுப் போக்குவரத்தில் வருவாய் இழப்பைக் காரணம் காட்டி அரசுப் பேருந்து சேவைகளைக் குறைக்கும் அதே வேளையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் பராமரிப்புப் படிகளை வாரி வழங்கும் விஜய் அரசின் அடுத்தடுத்த இரு முடிவுகள் பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.

லாப நோக்கத்திற்காக 136 அரசு பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், பயணிகள் வரத்து குறைவாக உள்ளதாகக் கூறி 136 புறநகர் பேருந்து சேவைகள் அதாவது சுமார் 598 ட்ரிப்புகள் நிறுத்தப்பட உள்ளன. வார நாட்களில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay

போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் பேருந்துகளை இயக்குவதை நிறுத்துவதன் மூலம் டீசல் செலவைக் குறைத்து, நிர்வாகத்தின் வருவாயை உயர்த்த முடியும் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் போக்குவரத்து என்பது வணிக ரீதியான லாப நஷ்டத்தைப் பார்க்கும் துறையல்ல.. அது சாமானிய மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சேவைத் துறை ஆகும்.

ஒரு சில வழித்தடங்களில் வருவாய் குறைவாக இருக்கிறது என்பதற்காகப் பேருந்துகளைக் குறைப்பது அடித்தட்டு மக்களையும் கிராமப்புற மாணவர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அரசு துறைகள் லாபத்தில் இயங்க வேண்டும் என்று நினைக்க இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு மத்தியில் மக்கள் அரசுப் பேருந்துகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு கார்

ஒருபுறம் பொதுமக்களுக்கான பேருந்துகள் குறைக்கப்பட்டு வரும் சூழலில், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிற்காமல், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும்,

வாகனப் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படி.

அலுவலகப் பணிகளில் உதவ ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படி. இதன் மூலம் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ.1 லட்சம் வீதம், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் நேரடிப் படியாக மட்டுமே அரசு கஜானாவில் இருந்து வழங்கப்பட உள்ளது.

234 எம்.எல்.ஏ.க்களுக்கான வாகனப்படி ஆண்டுக்கு ரூ.21.06 கோடி, உதவியாளர் படி ஆண்டுக்கு ரூ.7.02 கோடி, படிகளுக்கான மொத்த ஆண்டுச் செலவு ரூ.28.08 கோடி என்று ரூ.56 வரை செலவு ஆகும்.

தினசரி வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் பயனடையும் சில நூறு பேருந்துகளின் டீசல் செலவைக் கணக்குப் பார்த்து சேவையை முடக்கும் அரசு, எம்எல்ஏக்களின் சொகுசுப் பயணத்திற்கும் பராமரிப்புக்கும் மட்டும் ஆண்டிற்கு பல கோடிகளை அள்ளி வீசுவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் தொகுதிப் பணிகளைச் செய்ய வசதிகள் தேவை என்பது உண்மைதான் என்றாலும், எளிய மக்களின் அன்றாடப் போக்குவரத்தைப் பறித்துவிட்டு மக்கள் வரிப்பணத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் ஆடம்பரச் சலுகைகளை வாரி வழங்குவது என்ன மாதிரியான மனநிலை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு உடனடியாகப் பேருந்து சேவைகளை முழுமையாக மீண்டும் இயக்கி சாமானிய மக்களின் பொதுப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+