அமைச்சர் செந்தில் பாலாஜியால் ஓமந்தூராரில் அலைக்கழிக்கப்படும் புறநோயாளிகள்.. கண்ணீருடன் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதால் மற்ற நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழிப்பதாக நோயாளிகளுடன் வந்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது 81 பேரிடம் ரூ 1.62 கோடி பணத்தை வாங்கி கொண்டு மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் பேரில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

Public complaint against Chennai Omanthurar not giving treatment for us

சுமார் 17 மணி நேரம் சோதனை நடைபெற்றது. தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவரை கைது செய்வதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். உடனே செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பைபாஸ் சர்ஜரி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் பிற நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு மருத்துவரை பார்க்க வந்து கால் கடுக்க நிற்க வைப்பதாகவும் 4 அல்லது 5 மணி நேரம் கழித்தே மருத்துவர்களை பார்த்ததாகவும் சில ஊழியர்கள் அந்த பிளாக் போ, இந்த பிளாக் போ என சுற்றி சுற்றி அலைய வைப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஒரு நோயாளிக்கு ஏற்கெனவே கால் வலிக்காக சிகிச்சை வந்துள்ளார். இந்த நிலையில் அலைகழிக்கப்பட்டதால் கால்களில் வலி அதிகமாகிவிட்டதாக கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளார். நாங்கள் இருக்கப்பட்டவர்களா, இல்லாத பட்டவர்கள் என்பதால்தானே இங்கு வந்தோம். எங்களை ஏன் அலைக்கழிக்கிறீர்கள் என கேட்டால் அதற்கு ஊழியர் ஒருவர் அப்படித்தான் செய்வோம், எங்க போய் புகார் அளிக்கிறியோ அளித்துக் கொள் என்கிறார். இங்கு பேட்டரி வாகனங்களும் வேலை செய்யாத நிலையில் கால்வலியுடன் புற நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+