"பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம்.. அன்வர் ராஜா" அதிமுகவினரை விரட்டிய ஊர் மக்கள்!
அன்வர்ராஜா எம்பியை பொதுமக்கள் சுற்றி கொண்டதால் விரட்டியடிக்கப்பட்டனர்
Recommended Video

சென்னை: "பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம், முதல்ல வெளியே போங்க.. இது எங்க ஏரியா" என்று கேட்டு எம்பி அன்வர்ராஜா உள்ளிட்ட அதிமுகவினரை ஊர்மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் "இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது" என்று உயர்த்தி குரல் கொடுத்தவர்தான் அன்வர் ராஜா.
பிறகு தன் ஊரிலேயே நின்று தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் ஒருநாள் திடீரென யாகம் வளர்த்தார். இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்வர் ராஜாவை உடனே வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அவருக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

கூட்டணி
இதன்பிறகுதான் பாஜக-அதிமுக கூட்டணி முடிவானது. இதுகுறித்து பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வந்த அன்வர் ராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, "தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்கத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுதான்" என்று அப்பட்டமாகவே சொன்னார்.

பாம்பன்
இப்படி தொடர்ந்து மாறி மாறி சர்ச்சை ஏற்படுத்தி வரும் அன்வர் ராஜாவினால் அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. அதிமுக கூட்டமா, அல்லது வேறு ஏதாவது கட்சி பணியோ தெரியாது, பாம்பன் தெற்குவாடி பகுதியில் அன்வர்ராஜா காரில் வந்து இறங்கினார். ஆதரவாளர்களுடன் வந்த அன்வர்ராஜாவை அங்கிருந்த மக்கள் வளைத்து சுற்றி கொண்டனர்.

வர்றீங்க
"எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்? இங்க எதுக்கு வர்றீங்க, அப்படியே கிளம்பி போயிடுங்க.. கட்சியில சீனியர்னு இருக்கிறவரைக்குதான் மரியாதை தருவோம்" என்று கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர். இதை கண்ட அன்வர்ராஜா ஆதரவாளர்களோ அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ வைரல்
"மரியாதையா இங்கிருந்து போயிடுங்க.. வெளியே போயிடுங்கா முதல்ல.. " என்று ஊர்மக்கள் திரண்டதும் அன்வர்ராஜா உள்ளிட்டவர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. பிறகு வந்த காரிலேயே அப்படியே ஏறி திரும்பி சென்றனர். அதிமுக-பாஜக கூட்டணி வைத்ததால் எம்பி உட்பட அதிமுக ஆதரவாளர்களை விரட்டியடித்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications