10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! தேர்வு எப்போது? ரிசல்ட் எப்போது? முழு தகவல்
சென்னை: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான 2024 -2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். செய்முறை தேர்வு எப்போது? பொதுத்தேர்வு எப்போது? ரிசல்ட் எப்போது என்பது உள்ளிட்ட அனைத்து தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொதுத்தேர்வு எப்போது?:
* 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 3 -25 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 5 - 27 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 28 - ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.
செய்முறை தேர்வு:
* 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 11 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும்.
ரிசல்ட் எப்போது?:
12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவானது வரும் மே 1 ஆம் தேதி வெளியிடப்படும்.
11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவானது வரும் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும்.
10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவானது வரும் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
* 28.03.2025 வெள்ளிகிழமை தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
* 02.04.2025 புதன்கிழமை ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.
* 04.04.2025 வெள்ளிக்கிழமை விருப்ப (ஆப்ஷனல்) மொழிக்கான தேர்வு நடைபெறுகிறது.
* 07.04.2025 திங்கட்கிழமை கணக்கு பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.
* 11.04.2025 வெள்ளிக்கிழமை அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.
* 15.04.2024 செவ்வாய்க்கிழமை சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
* 05.03.2025 புதன்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
* 10.03.2025 திங்கட்கிழமை ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.
* 13.03.2025 வியாழக்கிழமை கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
* 17.03.2025 திங்கட்கிழமை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
* 20.03.2025 வியாழக்கிழமை இயற்பியல், பொருளாதாரம் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
* 24.03.2025 திங்கட்கிழமை கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலெஜி உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
* 27.03.2025 வியாழக்கிழமை வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
* 03.03.2025 திங்கட்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
* 06.03.2025 வியாழக்கிழமை ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.
* 11.03.2025 செவ்வாய்க்கிழமை கணிதம், விலங்கியல், வணிகம், நுண்ணுயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கு நடக்கிறது.
* 14.03.2025 வெள்ளிக்கிழமை கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்டரி, ஹோம் சயின்ஸ், புள்ளியியல், எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்சர் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
* 18.03.2025 செவ்வாய்க்கிழமை உயிரியல், தாவரவியல், ஹிஸ்டரி, பிசினஸ் மேத்தமடிக்க்ஸ் மற்றும் ஸ்டட்டிஸ்டிக்ஸ் பாடங்களுக்கு நடக்கிறது.
* 21.03.2025 வெள்ளிக்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
* 25.03.2025 செவ்வாய்க்கிழமை இயற்பியல், பொருளாதாரம் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
* 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications