ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் நடைபெற போகிறது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை அடுத்து ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற போகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள் 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற போகிறது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக உள்ள கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக பெரிய கூட்டணி அமைத்து போட்டியில் இறங்கி உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளது. இதேபோல் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவும் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நா.த.க என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தற்போது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான நடைமுறைகளை தீவிரமாக செய்து வருகிறது. கடந்த மார்ச் 20ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. மார்ச் 27ம் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றது. நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று முடிந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். நாளைஇறுதி வேட்பாளர் பட்டியலும், சுயேட்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், "வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி நிறுவனங்கள்) மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் (BPO) நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications