ஸ்மார்ட் சிட்டி: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வைத்த 2 முக்கிய கோரிக்கைகள்

டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்மார் சிட்டி திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, கோவை, தூத்துக்குடி மாவட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால் நீரில் மிதக்கின்றன என்றும், அதுகுறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் தேவை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.. இதனால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படி தண்ணீர் தேங்குவதற்கும், வீடுகள் வெள்ள நீரில் மிதப்பதற்கும், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அனைத்து பகுதிகளையும் நாசமாக்கியதுதான் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக கிளம்பிஉள்ளது.

எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

அரசியல் கட்சி தலைவர்கள் இதுகுறித்த கேள்விகளை எழுப்பி, விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டும் வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், கோவை நகரம் தொழிலில் பழைய நிலையை அடைய வேண்டும் கட்டுமானம் வலுப்படுத்த வேண்டும்.. ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படும் நகரத்தில் மழை பெய்தால் வீதிகளில் நடக்க முடிவதில்லை... த மிழக அரசு கோவையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.. என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 விசாரணை ஆணையம்

விசாரணை ஆணையம்

இப்போது மீண்டும் ஸ்மார்ட் சிட்டி குறித்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.. ஸ்மார்ட் சிட்டி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் சொன்னதாவது: தமிழகத்தின் முக்கிய நகர்ப்புறங்களில் தான் இந்த மழை வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

 மக்கள் வெளியேற்றம்

மக்கள் வெளியேற்றம்

இந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளே நகர மக்களை நரக மக்களாக மாற்றியுள்ளது. சென்னை, தூத்துக்குடி, கோயமுத்தூர் போன்ற நகரங்களில் வாழ்கின்ற மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.. தமிழக அரசு நிர்வாகம் முற்றுமாக முடங்கிக் கிடக்கிறது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 2009ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி உண்மையிலேயே பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு தனியாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

அவ்வாறு செய்தால் தான் இந்த நகரங்களுக்கு விமோசனம் கிடைக்கும். இல்லாவிட்டால் இயற்கை பேரிடர்களிலிருந்து ஒருபோதும் தப்பிக்க இயலாது. இயற்கை சீற்றத்தை நாம் ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் மேற்கண்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அவற்றிற்குதான் செலவிடப்பட்டதா என்பது குறித்து முழுமையான ஆய்வு வேண்டும்" என்ற 2 முக்கிய கோரிக்கையை கிருஷ்ணசாமி முன்வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+