பரபரப்பான அரசியல் சூழல்.. புதுவையில் ராகுல் காந்தி பிரசாரம்- சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரியில் இன்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னை வருகை தந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இவர்களில் 2 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். இதனால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது.

இதனிடையே புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திடீரென நீக்கி இருக்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அத்துடன் தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன், புதுவை துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது; எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ஆதரவு இருக்கிறது என முதல்வர் நாராயணசாமி தரப்பு கூறி வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே புதுச்சேரியில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். புதுச்சேரியில் மீனவர்கள், மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.

இதற்காக இன்று காலை சென்னை வருகை தந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், ராகுல் காந்தியை வரவேற்றனர். அதன் பின்னர் புதுச்சேரிக்கு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications