மெரினாவில் இருக்கும் கண்ணுக்கே தெரியாத ஆபத்து.. தமிழ்நாட்டின் மோசமான கடற்கரைகளின் பின்னணி
சென்னை: புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் ஐ.டி. ஊழியர்களான கர்நாடகாவை சேர்ந்த மேகா (வயது 29), பிரட்சுவால் மேத்தி (29), ஆந்திரா விஜயவாடா பவன்குமார் (25) ஆகியோர் கடலில் மூழ்கிய நிலையில், புதுச்சேரி கடல் அவ்வளவு ஆபத்தானதா என்று பலரும் யோசிப்பார்கள். ஏன் புதுச்சேரி கடல் ஆபத்தானது. அதேபோல் எவை எல்லாம் தமிழ்நாட்டிலேயே ஆபத்தான கடற்கரைகள் என்பது பற்றியும், அதன் அறிவியல் உண்மைகள் பற்றியும் பார்ப்போம்.
புதுச்சேரி கடலில் அதிகம் சுற்றியவர்களுக்கு அதன் ஆபத்து நன்கு தெரியும். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு தெரியாமல் போயிருக்கும். புதுச்சேரி கடற்கரையை பொறுத்தவரை அடியில் வலுவான நீரோட்டம் உள்ள கடற்கரையாகும் இது நீச்சலடிப்பவர்களை திடீரென கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் அவர்களுக்கு இழுத்து செல்லப்பட்டிருப்பார்கள்.

வலுவான நீரோட்டம்
இதேபோல் தமிழ்நாட்டின் பெரும்பாலான கடற்கரைகளில் அண்டர்கரண்ட் என்று அழைக்கப்படும் வலுவான நீரோட்டம் நீருக்கு அடியில் இருப்பதால், தமிழக கடற்கரைகள் பொதுவாவே ஆபத்தாகக் கருதப்படுகிறது. எனினும் கடலில் ஆபத்துகளை பற்றி பார்ப்போம்,ரிப் கரண்ட்ஸ் (Rip Currents) என்று அழைக்கப்படும் வலுவான நீரோட்டங்களை பொறுத்தவரை. கடலோரத்தில் இருந்து கடலை நோக்கி வேகமாகப் பாயும் . இது நீச்சலடிப்பவர்களைக் கடலுக்குள் இழுத்துச் செல்லும்.
அழுக்கு நீர்
குறிப்பாக பெருநகரங்களுக்கு அருகில் உள்ள கடற்கரைகளில், சாக்கடைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் நீர் மிகவும் அசுத்தமானதாக மாறி இருக்கும். இந்த கடற்கரைகளும் ஆபத்தானது ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் பெரும்பாலானவை ஆபத்தானவை என்றாலும், சில கடற்கரைகள் மிகமிக ஆபத்தானவையாக உள்ளன.
பழவேற்காடு கடற்கரை
மெரினாவை ஒப்பிடும் போது பழவேற்காடு கடற்கரையில், வங்காள விரிகுடாவிலிருந்து வரும் அலைகள் மற்றும் பழவேற்காடு ஏரியிலிருந்து வெளியேறும் நீரின் நீரோட்டங்கள் ஒன்று சேர்ந்து வலுவான அலைகளை உருவாக்கி வருகின்றன. இது எதிர்பாராதவகையில் மக்களை கடலுக்குள் இழுத்துச் செல்லும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. பழவேற்காடு கடற்கரையின் சில பகுதிகளில் ஆழம் திடீரென அதிகமாக இருக்கும். இது நீச்சல் தெரியாதவர்களுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். அதேபோல், மெரினா, கன்னியாகுமரி, மகாபலிபுரம் போன்ற பெரிய கடற்கரைகளைப் போல், பழவேற்காடு கடற்கரையில் பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது மீட்புக் குழுவினர் எல்லாம் இருக்க மாட்டார்கள்வழக்கமாக இருப்பதில்லை. இதனால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் எந்த உதவியும் உடனே கிடைக்காது.
பழவேற்காடு கடற்கரையில், அலைகள் ஆக்ரோஷமாகவே காணப்படும். இது வெளிப்படையாகவே ஆபத்தை நமக்கு உணர்த்தும். மழைக்காலங்களில், புயல் காலங்களில் சென்றால், மிகவும் ஆக்ரோஷமான பழவேற்காடு கடற்கரையை காண முடியும். மீனவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் அங்கு சுற்றவே கூடாது. ஏனெனில் பல இடங்களில் கடல் மிகவும் ஆழமாக இருக்கும். பார்த்தாலே பயந்து போவீர்கள்.
மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புற கடற்கரையாகும். நீச்சல் மற்றும் குளிப்பதற்கு ஆபத்தான இடம் தான். இங்கு வலுவான அண்டர்கரண்ட்கள் மற்றும் நீரோட்டங்கள் காரணமாக அடிக்கடி மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து வருகிறார்கள். எனவே, இங்கு குளிப்பது சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருக்கிறது. மெரினா கடற்கரை சாக்கடைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் நீர் மிகவும் அசுத்தமானதாக மாறி இருக்கும். அதுமட்டுமின்றி வலுவான நீரோட்டம் நீருக்கு அடியில் உருவாகி ஆளையே இழுத்து சென்றுவிடும். பழவேற்காடு கூட கண்ணுக்கு ஆபத்தை காட்டிவிடும். ஆனால் இது ஆபத்து என்று தெரியாமலேயே போய் சிக்கி கொள்பவர்கள் அதிகம். மெரினா மட்டுமல்ல மகாபலிபுரமும் இப்படித்தான் வலுவான நீரோட்டம் இருக்கும்.
கன்னியாகுமரி கடற்கரை
கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் (அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல்) சங்கமிப்பதால், அலைகளும் நீரோட்டங்களும் மிகவும் சீரற்றதாகவும், வலுவாகவும் இருந்து வருகிறது. சில இடங்களில் திடீரென ஆழம் அதிகமாக இருக்கும். இதனால், இங்கும் குளிப்பது ஆபத்தானதாகக் இருக்கும். அலைகளும் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் நீச்சல் தெரியாதவர்கள் கண்டிப்பாக குளிக்கவே கூடாது.
முட்டம் கடற்கரை, கன்னியாகுமரி: இது பாறைப் பரப்புகள் மற்றும் வலுவான நீரோட்டங்களைக் கொண்டதால், நீச்சலுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.
தனுஷ்கோடி, இராமேஸ்வரம்
தனுஷ்கோடியில் கடல் ஆழம் குறைவாக இருந்தாலும், திடீரென நீரோட்டம் அதிகமாக இருக்கும். ஒருபுறம் வங்காள விரிகுடாவும் மறுபுறம் மன்னார் வளைகுடாவும் இருக்கும், இங்கு அலைகளின் போக்கு கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால் குளிக்கவே கூடாது.இங்கு மட்டுமல்ல பெரும்பாலான தமிழக கடற்கரைகள் ஆபத்தானது தான்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications