இதுவரை பாதிப்பில்லாத புதுக்கோட்டையிலும் கால் வைத்த கொரோனா.. தப்பி வருவது 2 மாவட்டங்கள் மட்டுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவை குணப்படுத்துவதில் தமிழகம் தான் நம்பர் 1

    தேசிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 1520 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Pudukkottai district now been affected by coronavirus in Tamil Nadu

    இருப்பினும், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாநிலங்களில் ஒருவருக்கு கூட நோய்த்தொற்று பதிவாகவில்லை. அதாவது சோதனைக்கு உட்பட்டோரில் ஒருவருக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

    இத்தனை நாட்களாக இருந்த இந்த நிலை இன்று மாறியுள்ளது. இன்று மாலை விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். இது அமைச்சரின் சொந்த மாவட்டமாகும்.

    எனவே இப்போதைய நிலைமையில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே பாதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கின்றது. இந்த நிலை தொடர தீவிர முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    மயிலாடுதுறை முன்பு நாகை மாவட்டத்தோடு சேர்ந்து இருந்தது. சமீபத்தில் பிரிக்கப்பட்டதால் அந்த மாவட்டத்தில் கொரோனா இல்லை என்று கூறுவது டெக்னிக்கலி சரியாக இருக்காது என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.

    அதே நேரம் சென்னையில் அதிகபட்சமாக 303 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 18 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 133 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 109 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+