அதிமுக 131 இடங்களில் வெற்றி பெறும்.. இது புதிய தலைமுறை புதுயுகம் கருத்துக் கணிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 44% வாக்குகளை பெற்று, 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுயுகம் நடத்திய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை குழுமத்தின் நிறுவனமான புதுயுகம் டிவி கருத்து கணிப்புகளை நடத்தியது. இந்த கருத்து கணிப்புகள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து 234 தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் என்ற அடிப்படையில் 2900 வாக்குசாவடிகளின் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிமுகவிற்கு பக்க பலமாக இருக்கும் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 46.5% வாக்குகளை பெறும் என்றும் திமுக 38.5% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் அதிமுக கூட்டணி 39% வாக்குகளை பெற்று பின்னடைவை சந்திக்கும் என்றும் திமுக கூட்டணி 45% வாக்குகள் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 44% வாக்குகளும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 45% வாக்குகளை பெறும் என்றும் திமுக கூட்டணி 41% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று கூறப்பட்ட தெற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 43% வாக்குகளும் திமுக கூட்டணி 42.8% வாக்குகளும் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் அதிமுக கூட்டணி 44% வாக்குகளை பெறும் என்று புதுயுகம் டி.வி நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம் திமுக கூட்டணிக்கு 42% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 53% மக்கள் தெரிவித்துள்ளனர். இது அதிமுக அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளதோடு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி 102 இடங்களிலும் மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் புதுயுகம் கருத்து கணிப்பு தெரிவிப்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications