தங்கதமிழ்ச் செல்வனை டிடிவி தினகரன் நீக்கமாட்டார்.. புகழேந்தி உறுதி
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட தங்கதமிழ்ச் செல்வனை அவர் நீக்கமாட்டார் என புகழேந்தி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளவர் தங்கதமிழ்ச் செல்வன். இவர் அக்கட்சி சார்பில் தேனி எம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தங்கதமிழ்ச் செல்வன் மட்டுமல்லாமல் அமமுக சார்பில் நிறுத்தப்பட்ட யாரும் வெற்றி பெறவில்லை.
இதனால் டிடிவி தினகரனை விட்டு மூத்த நிர்வாகிகள் விலக நினைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தங்கதமிழ்ச் செல்வன் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி அரசியல் களத்தை சூடேற்றி வருகிறது.

நீக்குங்கள்
இதுகுறித்து தங்கதமிழ்ச் செல்வன் தமிழ் தொலைக்காட்சி சேனலுக்கு பேசுகையில் கட்சி குறித்து ஊடகங்களில் நான் பேசியது உண்மைதான். அது தவறு என்றால் கட்சியிலிருந்து நீக்குங்கள்.

வருத்தம்
அதைவிட்டு விட்டு என்னை பற்றி சமூகவலைதளங்களில் தரக்குறைவான கருத்துகளை ஏன் பதிவிட வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து அமமுக மூத்த நிர்வாகி புகழேந்தி கூறுகையில் ஆடியோவில் பேசியதற்கு தங்கதமிழ்ச் செல்வன் வருத்தம் தெரிவிக்கவில்லை.

ஆலோசனை
வருத்தம் தெரிவிக்காமல் கட்சியிலிருந்து நீக்கச் சொல்வதை பார்த்தால் திட்டமிட்டு பேசுவது தெரிகிறது. தங்கதமிழ்ச் செல்வன் ஆடியோ குறித்து இன்று தேனி மாவட்ட பொறுப்பாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.

செந்தில் பாலாஜி
அந்த ஆலோசனையில் நிச்சயம் டிடிவி தினகரன் தங்கதமிழ்ச் செல்வனை நீக்கமாட்டார். அவராகவே வேறு கட்சிக்கு சென்றால்தான் உண்டு. செந்தில் பாலாஜியை எப்படி நீக்கவில்லையோ அதுபோல்தான் தங்கதமிழ்ச்செல்வனையும் நீக்கமாட்டார்.

இயக்கம்
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 6 தொகுதிகளில் அமமுகவும் அதிமுகவும் பெற்ற வாக்குகளை சேர்த்தால் திமுக தோற்று விடும் நிலை உள்ளது. எனவே தனிப்பட்ட ஒருவர் ஏதோ காரணங்களுக்காக கட்சி மீது புகார் கூறுவதால் அந்த இயக்கம் பாதிக்கப்பட்டது என்பது அர்த்தமில்லை.

அழைக்கவில்லை
தங்கதமிழ்ச் செல்வன் தவறான பாதையில் போய் கொண்டிருக்கிறார். கட்சி உள்விவகாரங்களை பேசி தீர்த்து கொண்டிருக்கலாம். அதிமுக தங்கதமிழ்ச் செல்வனை அழைக்கவில்லையே. தேனி மாவட்டத்தில் தங்கதமிழ்ச் செல்வனை ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் ஏற்றுக் கொள்வாரா என்றார் புகழேந்தி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications