இறுகும் பிடி.. புளியந்தோப்பு கட்டிடம் சரியில்லை என தூண்டி விடுகிறார்கள்.. கட்டுமான நிறுவனம் விளக்கம்
புளியந்தோப்பு கட்டுமானம் நிறுவனம் ஒரு விளக்கம் அளித்துள்ளது
சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்து, கட்டிடம் சரியில்லை என செய்தியை கிளப்பிவிட்டால், வைப்புத் தொகையான ரூ.1,50,000 செலுத்த தேவையில்லை என்று சிலர் தூண்டிவிட்டதன் காரணமாகவே புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பற்றி அவதூறு பரப்புகின்றனர் என்று புளியந்தோப்பு கட்டுமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.. மேலும், கொரோனா மையமாக பயன்படுத்தியதால்தான் கட்டிடம் சேதம் அடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் அங்கிருந்த மக்களை வெளியேற்றிவிட்டு 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை அதாவது 17 மாதங்களில் ரூ. 112.16 கோடி செலவில் ஏ,பி,சி,டி என்று 4 பிளாக்குகளில் 864 வீடுகள் கட்டப்பட்டன..
Recommended Video
9 அடுக்கு மாடி கொண்ட இந்த குடியிருப்பில் லிப்ட் வசதிகளும் உண்டு.. இதே போன்று அதே இடத்தில் 2019 முதல் 2021 வரை 18 மாதங்களில் 139.13 கோடி ரூபாய் செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன... இந்த 2 குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

மையம்
இதனிடையே, தொற்று பரவல் தமிழகத்திற்குள் தலைதூக்கவும், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தொற்று அதிகமிருந்த நேரத்தில் தற்காலிக ஆஸ்பத்திரிகளாக பயன்படுத்தப்பட்டன... தற்போது தொற்று குறைந்துவிட்டதால், மீண்டும் அந்த வாரிய குடியிருப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ஆனால், அந்த குடியிருப்பின் வீடுகளில் உள்ள சுற்றுசுவர் பில்லர் படிக்கட்டுகள் உறுதியாக இல்லை, சுவர்கள் பெயர்ந்து வருகிறது.. சுவர்களை தொட்டாலே பெயர்ந்து கொண்டு கொட்டுகிறது.. குடியிருக்கவே பயமாக உள்ளதாக அந்த குடியிருப்பு மக்கள் குற்றஞ்சாட்டினர்.

நேரில் ஆய்வு
இந்த விவகாரம் குறித்து நேற்றைய தினம் பேரவையில் எழும்பூர் திமுக எம்எல்ஏ பரந்தாமன் மற்றும், காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். பரந்தாமன் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டி முடித்த அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.. இந்த கட்டிடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்களை கண்டுபிடித்து அவர்கள் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம் கட்டிமுடித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அன்பரசன்
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பரசன், அந்த கட்டிடத்தின் தரம் மற்றும் உறுதி தன்மையை அறிய நானும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்து ஏற்கனவே இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஐஐடி அறிக்கை அளித்ததும், தவறு கண்டறியப்பட்டால் ஒப்பந்ததாரர், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அறிக்கை
இந்நிலையில், இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.. அந்த விளக்கத்தில் உள்ளதாவது: ''எங்களது PST கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் கட்டுமான பணியில் கடந்த 25 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தால் கமார் 100க்கும் மேற்பட்ட Projectகள் அரசிற்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பணி முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும், எங்கள் பணி ஒப்பந்த நிபந்தனைகள் படி திருப்திகரமாக சிறந்த முறையில் முடிக்கப்பட்டதாகவும் குடிசை மாற்று வாரியத்தின் செயற்பொறியாளரால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

வாரியம்
எங்கள் நிறுவனம் கட்டுமான பணியினை துவங்கிய நாள் முதல் கன ஆய்வுகளை அன்றாடம் குடிசைமாற்று வாரிய பொறியாளர்களாலும், வாரத்திற்கு இரண்டு முறை குடிசை மாற்று வாரியத்தால் நியமனம் செய்யப்பட்ட தனியார் பொறியாளர்களாலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிய பகுதியில் முன்பு வரித்த குடிசைவாழ் மக்கள் அப்பகுதியின் அருகிலேயே தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஷெட்டுகளில் வசிப்பதால் அவர்களும் எங்களது கட்டுமான பணியை நேரில் பார்த்து வந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சென்னை K.P.பார்க் பகுதியில் எங்களது நிறுவனத்தால்' கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தரமான முறையில் கட்டப்படவில்லை என்றும், அதன் காரணமாக பெரும்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வருகின்றன. அச்செய்தியை கேட்டு எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனர். அச்செய்திகள் துளியளவும் உண்மையல்ல.

ஒதுக்கீடு
எங்கள் நிறுவனத்தால் தரமான முறையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானங்களை குடிசைவாழ் மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒதுக்கீடு செய்யாமல் அதனை கொரானா தொற்றின் காரணமாக கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக தற்காலிக மருத்துவமனையாக சென்னை மாநகராட்சியால் ஓராண்டு காலம் பயன்படுத்தப்பட்டதில் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் படிக்கட்டுகள் வழியாக எடுத்து சென்று அதன் காரணமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

சேதம்
அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் முன்பு வசித்த குடிசை வாழ் மக்களுக்கு புதிய அடுக்கு மாடி வீடுகள் இதுநாள் வரை ஒதுக்கப்படாததால் ஆத்திரமுற்ற அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்து பல பொருட்களை திருடியும் சேதப்படுத்தியும் சென்றுள்ளனர். அதுகுறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவி செயற்பொறியாளரால் சென்னை மாநகரம் Basin Bnidge P4 காவல் நிலையத்தில் சமூக விரோதிகள் மீது புகாரும் வழங்கப்பட்டுள்ளது.

விளக்கம்
எங்கள் நிறுவனம் உழைப்பால் உயர்ந்திருப்பதை சகித்து கொள்ள இயலாத எங்கள் துறையைச் சேர்ந்த சக ஒப்பந்ததாரர்கள் அப்பகுதியில் வசித்த குடிசைவாழ் மக்கள் புதிய கட்டிடத்திற்கு சேதம் விளைவித்தால் குடிசை மாற்று வாரியம் அவர்களுக்கு "வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு வீடு ஒன்றிற்கு கிரைய தொகையாக ரூ.1,50,000 பெற்று கொள்ளாமல் இலவசமாக வீட்டை வழங்கி விடுவார்கள் என்று அவர்களை தூண்டியிட்டு சேதங்களை விளைவித்து எங்கள் நிறுவனத்தின் மீது அப்பட்டமான பழியை சுமத்தி வருகிறார்கள்

குறைபாடுகள்
எங்கள் நிறுவனத்தின் சார்பாக நல்லாட்சி வழங்கும் தமிழக அரசிற்கும், பொதுமக்கள் அனைவருக்கும் பணிவுடன் தெரிவிப்பது யாதெனில் K.P.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு எங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டுமான குறைபாடுகளோ, அல்லது தரமற்ற பொருட்களே காரணம் அல்ல என்பதனை பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் நிறுவணத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நபர்கள்மீதும் அதற்கு துணை போகும் நபர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தக்காரர்
இந்த விளக்கத்தை ஒரு நீண்ட அறிக்கையாகவே, பல லட்ச ரூபாய் செலவில் விளம்பராக வெளியிட்டுள்ளார் ஒப்பந்ததாரர்.. என்றாலும் தவறு கண்டறியப்பட்டால் ஒப்பந்ததாரர், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நேற்று உறுதியளித்திருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் மீதான பிடி இறுகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications