ஆபாசம்! அருவெறுப்பு! பெரியார் பற்றி வாயை விட்டு.. வாங்கிக்கட்டிக்கொண்ட ஃபயாஸ் ஹுசைன்.. என்ன நடந்தது?
சென்னை: ஃபயாஸ் ஹுசைன் என்ற காமெடியன் பெரியார் குறித்து செய்த ஸ்டான்ட் அப் காமெடி பெரிய அளவில் சர்ச்சையாகி விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி சூழலை பின் தொடர்பவர்களுக்கு ஃபயாஸ் ஹுசைன் என்ற காமெடியனை தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது. இவர் pun மற்றும் dank என்ற பெயரில் ஒரு சேனலை நடத்தி வருகிறார். இதை ஆங்கிலத்தில் சேர்த்து எழுதி தவறான அர்த்தம் வரும் வகையில்தான் அவரின் சேனல் பெயரே வைக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக காமெடிகளில் இரு வகை உள்ளது. ஸ்டான்ட் அப் காமெடிகளில் ஏற்கனவே எழுதி வைத்ததை பேசுவது. இன்னொரு வகை.. வந்திருக்கும் ஆடியன்ஸை பேச சொல்லி.. அவர்கள் சொல்வதற்கு கவுண்டர் கொடுத்து பேசுவது. இப்படி கவுண்டர் கொடுத்து பேசும் வகைதான் இப்போது ஸ்டான்ட் அப் காமெடி உலகில் ஹிட். இதைத்தான் ஃபயாஸ் ஹுசைன் செய்கிறார்.
ஆபாச பேச்சு: ஆனால் அதை அவர் செய்யும் விதத்தில்தான் தவறு இருக்கிறது. வந்திருக்கும் மக்களிடம் சில கேள்விகளை.கேட்பது . அதற்கு அவர்கள் சொல்லும் பதிலை வைத்து டபுள் மீனிங்கில் பேசுவது, அல்லது அவர்களை அவமானப்படுத்துவது போல பேசுவது அல்லது எல்லை மீறி பர்சனல் விஷயங்களை பேசுவது என்று இவர் வாய் கொஞ்சம் அல்ல ரொம்பவே நீளம்தான்.
உதாரணமாக ஒரு பெண் தனியாக வருகிறார் என்றால் அவரிடம் சிங்கிளா என்று கேட்டு அப்படியே கடலை போடுவது போல பேசுவதை இந்த 2கே உலகத்திலும் இவர் காமெடி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். அதோடு இல்லாமல் ஜோடியாக வந்தால்.. நீங்கள் எப்போது பார்த்தீர்கள் என்று கேட்பது தொடங்கி சகலத்தையும் கேட்டு எப்படியும் அதை டபுள் மீனிங்காக மாற்றிக்கொள்வார்.
சரி இவர் ஷோவை காசு கொடுத்து பார்க்க வந்துவிட்டோம்.. என்று மக்களும் நெளிந்தபடி அவர் சொன்னதுக்கு எல்லாம் சிரித்துக்கொண்டு இருப்பார்கள். அவரின் சேனலில் இதை பார்க்கும் மக்களுக்குத்தான்.. தங்கதுரை.. ஒரு அளவுக்குத்தான் லிமிட் என்று கோபமாக சொல்ல தோன்றும்.
பெரியார் பற்றி பேச்சு: இப்படி அசிங்கமாக ஜோக் செய்து கொண்டு இருந்த ஃபயாஸ் ஹுசைன்
தற்போது சர்ச்சையில் சிக்க காரணம் பெரியார். ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இவர் வந்திருந்த பார்வையாளர் ஜோடி ஒன்றிடம்.. உங்களுக்கு எப்படி கல்யாணம் ஆனது என்று கேட்க அவர் அரேஞ்ச்ட் மேரேஜ் என்று சொல்ல.. அதை பற்றி இவர் தொடர்ந்து பர்சனல் கேள்விகளை ஜாதி ரீதியாக கேட்டுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் உடனே அந்த பார்வையாளர்.. பெரியார் மேட்ரிமோனி இருந்திருந்தால் அதில் பார்த்து ஜாதி மீறி திருமணம் செய்திருப்பேன் என்பது போல சொல்ல.. உடனே குறுக்கிட்ட ஃபயாஸ் ஹுசைன் பெரியார் போலவா.. அப்படி என்றால் பெற்ற பெண்ணையா திருமணம் செய்ய முடியும் என்று விமர்சனம் செய்து அதை காமெடி என்றும் பேசி இருப்பார். இதை வீடியோவில் போட மாட்டேன் என்று அங்கே கூறிவிட்டு அதை கட் செய்யாமல் அப்லோடும் செய்திருக்கிறார்.
பெரியார் எடுத்த முடிவு என்ன.. அப்போது சொத்து சட்டங்கள் எப்படி இருந்தன.. மணியம்மை மேஜர், அவர் விருப்பத்தோடுதானே திருமணம் நடந்தது.. பெரியார் மணியம்மையை தத்து எடுத்து வளர்த்து வந்தார் என்ற, பிற்கால உள்நோக்க இடைச்செறுகல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே கிடையாதே.. என்பதெல்லாம் குறைந்தபட்ச அரசியல் தெரிந்தவர்களுக்கு கூட தெரியும். அதை பற்றி அறிவே இல்லாத அரசியல் அறிவற்றவர்கள்தான் பெரியார் பற்றி இப்போதும் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு திரிவார்கள்.
கடும் விமர்சனம்; கோவை என்றாலே இளக்காரமாக கிண்டல் செய்வது தொடங்கி பெரியார் வரை எல்லாத்தையும் offensive ஜோக்காக செய்வதே இவரின் வழக்கம். இப்போது இவரை மக்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து திட்டி வருகின்றனர்.
தன்னை கடுமையாக விமர்சனம் செய்து தனக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக இவர் பேஸ்புக்கில் இப்போது புலம்ப தொடங்கி உள்ளார்... offensive ஜோக்காக செய்தவர் தனக்கு வரும் விமர்சனங்களை சிரித்தபடி எடுத்துக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட விமர்சனங்களை பார்த்து offense ஆகும் நபர் எல்லாம் offensive ஜோக்காக சொல்வதுதான் நகைமுரண். உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா பாஸ்?!
பெரியார் தவறு: இவர் பெரியார் பற்றி பேசியது தவறு. தொடக்கத்தில் இதை வெறும் காமெடி என்று சொல்லி தப்ப முயன்று ஃபயாஸ் ஹுசைன் இப்போது வேறு வழியின்றி பட்டும் படாமல் ஒரு மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் இவரின் பட்டும் படாத மன்னிப்பை ஏற்காமல் இப்போதும் இவர் மீது கடும் கோபத்திலேயே உள்ளனர். சரியான கல்வியும்.. அரசியல் தெளிவும் இல்லாமல்.. மேடையில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணமே இது போன்ற காமெடிக்கு காரணம்.
offensive joke என்பது கண்டபடி பேசுவது அல்ல.. அதுவும் ஒரு அரசியல்தான்.. அதை தெளிவாக திட்டமிட்டு பேச வேண்டும் . ஆங்கிலத்தில் பில் பர், டேவ் சாப்பல், லூயிஸ் போன்றவர்களின் ஜோக்குகளை பார்த்தவர்களுக்கு இதன் அர்த்தம் புரியும். ஏன்.. நம்ம ஊரிலேயே விஜய் வரதராக் போன்றவர்கள் அரசியல் தெளிவோடு அவ்வப்போது offensive jokeகளை அடித்துள்ளனர். ஃபயாஸ் ஹுசைன் அடுத்த முறை ஸ்டேஜ் ஏறும் முன் கொஞ்சம் இவர்களை படிக்கலாம்.. படிக்காமலும் ஏறலாம்.. ஆனால் கண்டிப்பாக கொஞ்சம் பெரியாரை படிங்க பாஸ்!












Click it and Unblock the Notifications