வாவ் தள்ளு வண்டிகள்.. மக்களிடையே அமோக வரவேற்பு.. வசூலும் பிரமாதம்.. கலெக்ஷனைப் பாருங்களேன்!
சென்னை: தமிழகத்தில் நடமாடும் வாகனங்கள் மூலமாக கடந்த 24 ஆம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை (காலை 6 மணி வரை) தளர்வுகளற்ற முழு லாக்டவுன் அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் முதல் 7 நாட்கள் எந்த கடைகளும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சிக் குழுவுடன் இணைந்து காய்கறிகள் வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டன. இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

ஒரு வார காலம்
இதையடுத்து அடுத்த ஒரு வார கால நீட்டிப்பின் போது காய்கறிகளை போல மளிகைக் கடைகளும் பொதுமக்களிடம் போனில் ஆர்டர் பெற்று மளிகை பொருட்களையும் தள்ளுவண்டிகளிலும் டாட்டா ஏசர் வாகனங்களிலும் கொண்டு போய் விற்பனை செய்யலாம் என்ற தளர்வை அறிவித்தது.

நடமாடும் வாகனங்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் நடமாடும் வாகனங்கள் மூலமாக கடந்த 24 ஆம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

மெட்ரிக் டன்
தமிழகத்தில் மே 24 ஆம் தேதி 6,296 வாகனங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. அது போல் மே 25-ஆம் தேதி 13,096 வாகனங்களில் 6,500 ம மெட்ரிக் டன் காய்கறிகளும் மே 26 ஆம் தேதி 27,183 வாகனங்களில் 10,024 மெட்ரிக் டன் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகள்
மே 27ஆம் தேதி 31,995 வாகனங்களில் 11,416 மெட்ரிக் டன் காய்கறிகளும் மே 28ஆம் தேதி 36,443 வாகனங்களில் 13,366 மெட்ரிக் டன் காய்கறிகளும், மே 29-ஆம் தேதி 39705 வாகனங்களில் 13,692 மெட்ரிக் கடன் காய்கறிகளும் மே 30-ஆம் தேதி 33,664 வாகனங்களில் 13,472 மெட்ரிக் டன் காய்கறிகளும் மே 31 ஆம் தேதி 42,597 வாகனங்களில் 13,094 மெட்ரிக் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன.

ஜூன் 7 ஆம் தேதி வரை
அது போல் ஜூன் 1-ஆம் தேதி 42,919 வண்டிகளில் 13,904 மெட்ரிக் காய்கறிகளும், ஜூன் 2-ஆம் தேதி 42,641 வாகனங்களில் 13,996 மெட்ரிக் டன் காய்கறிகளும் ஜூன் 3-ஆம் தேதி 42,684 வாகனங்களில் 13998 மெட்ரிக் டன் காய்கறிகளும் ஜூன் 4-ஆம் தேதி 42,717 வாகனங்களில் 14,012 மெட்ரிக் டன் காய்கறிகளும் ஜூன் 5-ஆம் தேதி 42,664 வாகனங்களில் 14,001 மெட்ரிக் டன் காய்கறிகளும் ஜூன் 6ஆம் தேதி 42,632 வாகனங்களில், 13840 மெட்ரிக் டன் காய்கறிகளும் ஜூன் 7-ஆம் தேதி 34,342 வாகனங்களில் 9,815 மெட்ரிக் டன் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications