திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! "விஜய்யை முருகனுடன் ஒப்பிட்டு பாடவில்லை!" புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின்போது நான் முதல்வர் விஜய்யை முருகப்பெருமானோடு ஒப்பிட்டு பாடல் பாடியதாக என்னை திட்டுகிறார்கள். நான் அப்படி பாடவில்லை" என தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி விளக்கமளித்துள்ளார்.

திருச்செந்தூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. அப்போது அரசு சார்பில் சூரசம்ஹார வர்ணனை நடந்தது. அதில் புஷ்பவனம் குப்புசாமி பாடுகையில், "நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்து பகை முடித்த வேலவனின் தாள் பணிந்து வேண்டும் வரம் கேளுங்களேன், வெற்றி உண்டு பாருங்களேன், நம் தமிழக முதல்வர் போல் வேண்டும் வரம் கேளுங்களேன், நமக்கு வெற்றி உண்டு பாருங்களேன். கந்தனவன் திருநீறு கலி தீர்க்கும் அருமருந்து , வந்த வினை போக்கி அருள் வாழ்வளிக்கும் நன் மருந்து.. என பாடியிருந்தார்.

tiruchendur pushpavanam kuppusamy

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாடகர் வேல்முருகன், தமிழக முதல்வருக்கு அரோகரா, அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா என கோஷமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புஷ்பவனம் குப்புசாமி, முதல்வர் விஜய்யை முருகனுடன் ஒப்பிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புஷ்பவனம் வெளியிட்ட விளக்கம்

இதுகுறித்து புஷ்பவனம் குப்புசாமி வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம், நான் புஷ்பவனம் குப்புசாமி பேசுகிறேன். திருச்செந்தூரில் நடந்த இசைக் கச்சேரியில் நான் பாடிய பாடலை குறை சொல்லி பலரும் என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் திட்டும் அளவுக்கு நான் எதையும் தவறாக பாடிவிடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. பாராட்டும் நீங்கள்தானே திட்டுகிறீர்கள்.

திட்டுங்கள் ஆனால்...

ஆனால் எதற்காக திட்டுகிறோம் என தெரிந்து திட்ட வேண்டும். நான் பாடிய பாடலில் எந்த குறையும் இல்லை. நான் பாடியது இதுதான்- "நம் தமிழக முதல்வர் போல்" அங்கே கமா இருக்கிறது. "நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால்" யார் வேண்டிக் கொண்டால், நம் தமிழக முதல்வர் போல் வேண்டிக் கொண்டால், யாரிடம்? வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயமுண்டு... இப்போது புரிகிறதா?

யாருக்கு வெற்றி?

யாருக்கு வெற்றி நிச்சயமுண்டு? நமது தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல் நாமும் முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் என சொல்லியிருக்கிறேன். "வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள், வெற்றி உண்டு பாருங்கள்" இப்படித்தான் பாடினேன். இப்போது புரிகிறதா?

சாட்சியாகத்தானே சொன்னேன்

முதல்வர் விஜய்யை நான் சாட்சியாகத்தான் சொன்னேன்! வெற்றி எப்படி நிச்சயம், அதற்கு ஒரு சாட்சி வேண்டும்! நீங்களும் வேண்டும் வரம் கேட்டால் உங்களுக்கும் வெற்றி நிச்சயம் உண்டு என்றுதான் சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து என்னை திட்டுகிறீர்கள். முருகனுக்கு ஏராளமான பாடல்களை நான் பாடியிருக்கிறேன்.

என்ன பிழை?

தமிழறிந்த நான் இதில் பிழை செய்வேனா? முதல்வர் விஜய்யை முருகனுடன் ஒப்பிட்டு பாடியிருக்கிறேன் என என்னை விமர்சிக்கிறார்கள். எங்கே ஒப்பீடு இருக்கிறது? சாட்சியாகத்தான் அவரை வைத்திருக்கிறேன். முதல்வர் விஜய்யை முருகருடன் நான் ஒப்பிடவில்லை. ஆகவே முருகப்பெருமானுடைய பேரருள் அதற்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் ஒப்பிடவோ யாரையும் குறை சொல்லவோ இல்லை. முருகப்பெருமானை பாடியிருக்கிறேன், அவ்வளவுதான். இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு மேற்கொண்டு திட்டுவதை விட்டுவிடுங்கள். இவ்வாறு புஷ்பவனம் குப்புசாமி விளக்கம் அளித்திருந்தார்.

"முதல்வருக்கு அரோகரா"

சட்டசபை தேர்தலுக்கு முன்பு தவெக தலைவராக விஜய், திருச்செந்தூரில் விஸ்வரூப தரிசனம் மேற்கொண்டார். அதனால் அவர் தேர்தலில் வென்றார் என்றும் அவரை போல் நீங்களும் திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் தான் பாடியதாகவும் புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+