புஷ்பவனம் குப்புசாமிக்கு அடிச்ச யோகம்.. இயல், இசை நாடக மன்ற தலைவராக நியமனம்.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான புஷ்பவனம் குப்புசாமிக்கு இப்போது முக்கியமான பொறுப்பு தேடி வரப்போகிறது.. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக அவரை நியமனம் செய்துள்ளது அரசு.. ஏற்கனவே அந்த அமைப்பின் தலைவராகத் திரைப்படக் கலைஞர் வாகை சந்திரசேகர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக தற்போது புஷ்பவனம் குப்புசாமி தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வளர்ப்பதிலும், கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்காற்றி வரும் அரசு அமைப்புதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.

Pushpavanam Kuppusamy

இயல், இசை, நாடக மன்றம்

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இந்த மன்றம் செயல்பட்டு வருகிறது. நாட்டுப்புறக் கலைகள் தொடங்கி இசை, நாடகம் என பல்வேறு கலை வடிவங்களை வளர்ப்பதற்கான பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 1973-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், முத்தமிழை குறிக்கும் வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கலைமாமணி விருது பணி

கலைத்துறையில் இந்த மன்றத்தின் பணி என்ன என்று பார்த்தால், கலைஞர்களுக்கு விருது கொடுப்பது மட்டும் கிடையாது. கலைமாமணி விருது வழங்குவது முக்கியமான பணிகளில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்குவது, அவர்களின் குடும்ப பராமரிப்புக்கு உதவுவது, இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்த நிதியுதவி செய்வது என பல்வேறு பணிகளையும் மன்றம் மேற்கொண்டு வருகிறது.

மாநிலங்களுக்கு இடையே கலைக்குழுக்களை பரிமாற்றம் செய்வது, கலை விழாக்களை நடத்துவது, பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளும் இந்த மன்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு சார்பில் இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது.

புஷ்பவனம் குப்புசாமி

இப்படிப்பட்ட முக்கியமான அரசு அமைப்பின் தலைவராகத்தான் நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு முன்பு திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் இந்த அமைப்பின் தலைவராக இருந்தார். அவருக்கு பிறகு தற்போது புஷ்பவனம் குப்புசாமியின் பெயர் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், நியமனமும் வெளியாகியுள்ளது.

நாட்டுப்புற இசையைப் பொறுத்தவரை புஷ்பவனம் குப்புசாமிக்கு தனி அடையாளம் இருக்கிறது. கிராமிய மணம் மாறாத பாடல்களை மக்களிடம் கொண்டு சென்றதுடன், நாட்டுப்புற இசை மூலம் சமூக கருத்துகளையும் விழிப்புணர்வையும் பேசி வந்தவர். சினிமா பாடல்களிலும், பின்னணிப் பாடகராக பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இசையமைப்பாளர்கள் இளையராஜா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களையும் பெற்றுள்ளார்.

தமிழக அரசு போஸ்டிங்

இந்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமி தொடர்பான இன்னொரு விஷயமும் இப்போது கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் தமிழக அரசியல் குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, ஆடிப்பெருக்கு தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த புஷ்பவனம் குப்புசாமி, தமிழக அரசை வெகுவாக பாராட்டியிருந்தார்.. "தமிழ்நாட்டில் இப்போது யாரும் தைரியமாக லஞ்சம் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. யாராவது லஞ்சம் வாங்கியதாக தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால் தான் இப்போது பலரும் பயப்படுகிறார்கள். நல்ல மாற்றம் நடந்தால் அதை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும்.

விஜய்க்கு பாராட்டு

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்துள்ளார். இன்னும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யவில்லை.. அவர் இப்பதான் வந்திருக்கிறார், எல்லாமே மாறும், சொன்னதை கண்டிப்பாக காப்பாற்றுவார், நம்புவோம்... நம்பிக்கைதான் வாழ்க்கை.. எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் எதுவும் நடக்காது" என்று கூறியிருந்தார்..

இப்படியான சூழ்நிலையில்தான், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் முக்கியமான அரசு அமைப்பின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.. கலை உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த அவருக்கு இந்த உயர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+