Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. பதறாம இருங்க... புஷ்பவனம் குப்புசாமி மகள் வீடியோ மெசேஜ்!

அனிதா குப்புசாமி மகள் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. பதறாம இருங்க... புஷ்பவனம் குப்புசாமி மகள் வீடியோ மெசேஜ்!

    சென்னை: "எனக்கு ஒன்னும் இல்லை.. வீட்லதான் இருக்கேன்.. எல்லாரும் ஒன்னா இருக்கோம்.. நான் நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. இந்த போலி செய்தியை மட்டும் பரப்பாம, பதறாம இருங்க.." என்று புஷ்பவனம் குப்புசாமி மகள் டாக்டர் பல்லவி வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

    பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.. மூத்த மகள் பல்லவி.. டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் டாக்டர் பல்லவியை காணவில்லை என்று புகார் ஒன்றினை தந்ததாக செய்திகள் பரவின.

    செல்போன்

    செல்போன்

    அந்த புகாரில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்துடன் காரை எடுத்து கொண்டு சென்றுள்ளார் பல்லவி.. ஆனால், நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்லவியின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. அதனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.

    விளக்கம்

    விளக்கம்

    ஆனால், இந்த தகவல் பரவிய அடுத்த சில மணி நேரத்திலேயே பல்லவியின் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடப்பட்டது. "நண்பர்களே, நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறப்பட்டிருந்தது. இதனால், ஒரு பக்கம் புகார், மறு பக்கம் பதிவு என்பதால், பல்லவி உண்மையிலேயே காணாமல் போய் விட்டாரா அல்லது பத்திரமாக இருக்கிறாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

    வதந்தி

    வதந்தி

    இந்த நிலையில், பல்லவியே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் பத்திரமாக இருப்பதாகவும், ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாமே வதந்திதான் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் சொல்லி உள்ளதாவது:

    இனிதான் தெரியும்

    இனிதான் தெரியும்

    "எல்லாரும் பார்த்திருப்பீங்க.. நியூஸ் ஸ்பிரெட் பண்ணிட்டாங்க.. நான் காணாம போயிட்டேன்.. அம்மா, அப்பா ரெண்டு பேரும் போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திருக்காங்கன்னு.. ஸோ.. இது போலியான நியூஸ்.. வதந்தி.. இது எங்கே இருந்து ஆரம்பிச்சது அப்படிங்கறதை நாங்க இன்னும் பார்த்துட்டு இருக்கோம்... இனிமேல்தான் அது என்ன, ஏதுன்னு தெரியவரும்.

    வீட்லதான் இருக்கோம்

    வீட்லதான் இருக்கோம்

    அதுக்குள்ள, எங்களுக்கு நிறைய போன் கால்ஸ் வந்துடுச்சு.. மெசேஜ் வந்தது.. முடிஞ்ச வரைக்கும் நானும் அவங்களுக்கு ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். ஒரு டைம்ல என் போனே ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு சார்ஜ் இல்லாமல்.. இப்பவும் நான் எங்க வீட்டுலதான் இருக்கேன்.. எல்லாருமே வீட்லதான் இருக்கோம்.

    நொந்து போய் உள்ளேன்

    நொந்து போய் உள்ளேன்

    அப்பா முதல்ல ஊர்லயே இல்லை.. 2 மணி நேரத்துக்கு முன்னாடிதான் ஊர்ல இருந்து வந்தாரு.. அப்படி இருக்கும்போது, அப்பா எப்படி நேத்து நைட் கம்ப்ளைன்ட் தந்தாருன்னு சொல்றாங்க எனக்கு தெரியல. ஊர்லயே இல்லாத ஒரு மனுஷன் கம்ப்ளைன்ட் தந்த மாதிரி சொல்லி இருக்காங்க.. நான் இதனால் மனசு உடைஞ்சு போயிருக்கேன்.

    நல்லா இருக்கேன்

    நல்லா இருக்கேன்

    நீங்க என்னை இப்போ பார்க்கறீங்க.. நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. இந்த போலி செய்தியை மட்டும் பரப்பாம, பதறாம இருங்க.. எனக்கு போன் பண்ணி கேட்ட, மெசேஜ் அனுப்பி கேட்ட எல்லாருக்கும் ,,ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்" என்று தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு பல்லவியே முற்றுப்புள்ளி வைத்து தெளிவுபடுத்தி உள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+