Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக உடன் கூட்டணி.. முதல் ஆளாக வந்த கிருஷ்ணசாமி! விஜய் கூட்டணி கணக்கு ஜெயிக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை. இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, விஜய் உடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். தவெக கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலவி வரும் சூழலில் மூத்த அரசியல் தலைவரான கிருஷ்ணசாமி, முதல் நபராக தவெக உடன் கூட்டணி விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக என பலமாக உள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. மறுமுனையில் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கியுள்ளது.

Puthiya Tamilagam Krishnaswamy Becomes First Leader to Express Interest in Alliance with TVK Vijay

விஜய் கூட்டணி திட்டம்

நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாட்டிலேயே, திமுக மற்றும் பாஜக தனது எதிரி என்று தெரிவித்திருந்தாலும் அவர் அதிரடி அரசியலை இதுவரை முன்னெடுக்கவில்லை. நாளை முதல் தான் நேரடி பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தரப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் விஜய்.விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் தவெக மிகவும் திட்டவட்டமாக உள்ளது.

தவெக தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் விஜய்.

நாதக , விசிக

நாம் தமிழர் கட்சி முன்பு விஜய் உடன் கூட்டணி அமைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீமான் நாள்தோறும் விஜய்யை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். இதனால் நாதகவுடன் தவெக கூட்டணி என்பது இயலாத காரியமாகிவிட்டது. விசிக உடன் விஜய் கூட்டணி அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன. திருமாவளவன், திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதியாக கூறி வருகிறார்.

முன்பு தவெக அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதில் தவெக உறுதியாக இருந்ததால் இந்த பேச்சுவார்த்தை முற்றுப் பெற்றதாக தகவல் வெளியானது. அதன்பிறகு தான், அதிமுக - பாஜக உடன் கூட்டணியை அறிவித்தது.

அதிமுக

எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டியில், தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு, தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று பதில் அளித்துள்ளார். மேலும், விஜய் இறங்கி வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு, தவெகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தனது கூட்டணியில் இணைக்க விஜய் தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் கூட்டணியில் சேர்க்கக்கூடும் என்ற பேச்சுகளும் அரசியல் களத்தில் உலவுகின்றன.

டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "விஜயகாந்த் 2006ல் தாக்கத்தை ஏற்படுத்திய போல், திரையுலகில் இருந்த விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது எல்லா கட்சிகளையும் பாதிக்கும். விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியதால் அவருடன் கூட்டணி என்பது தவறானது.

நாங்கள் சீமான் உடன் போகமாட்டோம். திமுக உடனும் போக மாட்டோம். புதிய கூட்டணி உருவாகும். அரசியலில் ஏதுவும் நடக்கும். நாங்கள் இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும். விஜய் கூட கூட்டணி போனால் என்ன? நான் எந்தக் கட்சி உடனும் போகலாம். யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். விஜய் என்ன தீண்டத்தகாதவரா? அரசியலுக்கு தகுதி கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது." எனத் தெரிவித்திருக்கிறார்.

தேமுதிக பிரேமலதா

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும். யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் நடைபெறும் மாநாட்டுக்கு பிறகு அறிவிப்போம் எனத் தெரிவித்து வருகிறார். பிரேமலதா இதுவரை விஜய் உடனான கூட்டணி விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், கூட்டணி குறித்த கேள்விகளை திட்டவட்டமாக மறுக்கவும் இல்லை.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

இந்நிலையில் தான் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, "தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும். எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ அந்த கூட்டணிக்கு சொல்வோம். திராவிட கட்சிகளை தாண்டி விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தந்தால் அவருடன் கூட்டணி சேர்வது குறித்து பரிசீலிப்போம்.

தமிழகத்தில் திராவிடம் நிலைத்து நிற்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. கள நிலவரங்களுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும். விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால் கூட்டணி குறித்து மாநாட்டிற்கு பின்பு முடிவெடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

முதல் சீனியர் தலைவர்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, விஜய் உடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிப்போம் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். தவெக கூட்டணி தொடர்பாக, அவர் கட்சி தொடங்கியது முதலே பல்வேறு யூகங்கள் உலவி வருகின்றன.

ஆனால், நாதக, விசிக என பல கட்சிகள், விஜய் உடனான கூட்டணி பேச்சுகளை மறுத்துவிட்டன. இந்தச் சூழலில், நீண்ட அரசியல் அனுபவம் பெற்ற கட்சித் தலைவரான கிருஷ்ணசாமி, தவெக உடன் கூட்டணி விருப்பத்தை முதல் ஆளாக வெளிப்படுத்தி உள்ளார்.

1996 தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார் கிருஷ்ணசாமி. 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தென்காசி தொகுதியில் 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+