Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது ரூட்.. ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணியாம்.. விஜய் பக்கம் ஒதுங்கும் கிருஷ்ணசாமி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய், ஆட்சியில் பங்கு தருவோம் என்ற முடிவில் உள்ள நிலையில், கிருஷ்ணசாமியின் பேச்சு அவர் தவெக பக்கம் ஒதுங்குகிறாரா? என்ற விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி திருவாரூர் மாவட்டத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசினார்.

TVK Vijay Krishnaswamy

கிருஷ்ணசாமி பேசுகையில், "தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தனிக் கட்சி ஆட்சி என்பது சாத்தியமில்லை. புதிய தமிழகம் கட்சி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் பங்கு என்ற நிலைப்பாட்டுடன் கூட்டணி அமைக்கும்." எனத் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், பாஜக கூட்டணியில் பாமக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.

எனினும், திமுக கூட்டணியைப் போல தற்போது வரை பாஜக, அதிமுக கூட்டணியில் எந்த கட்சியும் உறுதியாக இல்லாத நிலை நீடிக்கிறது. பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் இணையுமா? அல்லது தனி அணியை உருவாக்குமா என்ற குழப்பமான சூழலே உள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனித்துக் களம் காண இருக்கிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த தவெக மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் கூட்டணியாக தேர்தலை சந்திப்போம், ஆட்சியில் பங்கு கொடுப்போம் எனத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்திருந்தது.

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஆட்சியில் பங்கு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி என தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே தவெக கூட்டணியில் புதிய தமிழகம் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

1996 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். தென்காசி தொகுதியில் 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார். இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணசாமியின் கணக்கு விஜய் பக்கம் இருப்பதாக இப்போதே பேச்சுகள் கிளம்பி இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+