பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருடன் கருக்கா வினோத் வந்த வீடியோ! புழல் சிறைத் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புழல் சிறையில் இருந்த போது கருக்கா வினோத் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கும் வெவ்வேறு என சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சிறைத் துறை கூறியிருப்பதாவது: புழல் சிறையில் இருந்த போது கருக்கா வினோத் இருந்த பிளாக் வேறு. அது போல் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வழக்கில் கைதான நபர்களின் பிளாக் வேறு. சிறையில் வெவ்வேறு பிளாக்குகளை சேர்ந்த இரு தரப்பும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை.

Puzhal prison explains where was Karukka Vinoth put in cell

கருக்கா வினோத் சிறையில் இருந்த நாட்களில் அவரை சந்திக்க குடும்பத்தினரோ, உறவினர்களோ மற்றவர்களோ வந்ததாக பதிவுகளில் இல்லை. ஜாமீனில் வெளியே வருபவர்களும், வழக்கிலிருந்து விடுவிக்கப்படுபவர்களும் பரிசோதனை செய்து ஒரே நேரத்தில் வெளியே அனுப்புவது வழக்கம் என தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது நேற்று மதியம் ஒருவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அவரை போலீஸார் மடக்கி பிடித்த போது அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் மறுப்பதால் பெட்ரோல் குண்டை வீசியதாக வினோத் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருக்கா வினோத் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையில் ஜாமீனில் வெளியே வந்த கருக்கா வினோத், அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் வந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. எனவே கருக்கா வினோத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் என்ன தொடர்பு? பலமுறை சிறை சென்ற கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்தது யார், அவருக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவது யார் போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் புழல் சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+