உங்கள் அறிவுத்திறனை சோதிச்சிடலாம் வாங்க.. விடுபட்ட எண்ணை கண்டுபிடிங்க.. 10 செகண்ட் தான் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு எண் விடுபட்டுள்ளது. அந்த எண் என்ன என்பதை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் இந்த புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ஆப்டிகல் இல்யூஷன், PUZZLE எனப்படும் புதிர்கள் அதிகம் டிரெண்டாகி வருகின்றன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த படங்கள் இருப்பதால் நெட்டிசன்கள் அதிகம் விரும்பும் ஒன்றாக இந்த புதிர்கள் மற்றும் இல்யூஷன் படங்கள் அமைந்து இருக்கின்றன.

புதிர்களை பொறுத்தவரை பொரும்பாலான போட்டித்தேர்வுகளில் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். மத்திய, மாநில அரசு பணிகளுக்காக படிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக இது போன்ற புதிர் கணக்குகளை பிராக்டிஸ் செய்யாமல் இருக்க முடியாது. மிகவும் எளிதானவும் அதேவேளையில் கொஞ்சம் டிரிக்ஸ் ஆகவும் இந்த புதிர்கள் இருக்கும்.
நேரடியாக விடை இன்றி நம் மூளையை கொஞ்சம் சோதிப்பதாக இந்த புதிர்களுக்கான விடை இருப்பதால், ஒருவரின் அறிவுத்திறன், புத்திக்கூர்மை, கவனிப்புத்திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் விதமாக புதிர்கள் இருக்கின்றன. புதிர்களுக்கான விடையை கண்டுபிடித்து விட்டு.. தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து விடையை கண்டுபிடித்து சொல் பார்க்கலாம்..என சவால் விடுவதை பார்க்க முடியும்..
தேர்வுக்கு தயராகி வருவபர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் கண்டிப்பாக இத்தகைய புதிர்கள் இடம் பெற்று இருக்கும்.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. வழக்கமான இல்யூஷன் படங்களுக்கு பதிலாக இன்று சற்று வித்தியாசமாக புதிர் படங்களை பார்க்கலாம்... இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் புதிர் படத்தில் 2=6, 3=12 என கொடுக்கப்பட்டுள்ளது.
அது எப்படி 2 = 6 வரும் என நீங்கள் யோசிக்கலாம்... இதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. ரொம்பவே ஈசியானதுதான்.. இருந்தாலும் 10 செகண்ட் டைம் தான் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. உங்களுக்கான டைம் தொடங்கியது.... 1, 2, 3, 4.......10 ஓகே டைம் ஓவர்.. உங்களில் பலரும் படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள்..
10 செகண்ட் என்ன 5 செகண்டிலேயே என பலரும் நினைப்பது தெரிகிறது.. கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்...போட்டித்தேர்வுகளில் எல்லாம் நீங்கள் கில்லி மாதிரி கணக்குகளை போடலாம்.. விடையை கண்டுபிடிக்காதவர்கள் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து பாருங்கள்... இன்னும் கூட தெரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு விடைக்கான டிரிக்ஸ் இங்கே கொடுக்கிறோம்..

படத்திற்கான விடை 90... அது எப்படி 9 = 90 ஆக எப்படி வரும் என்று யோசிப்பவர்களா நீங்கள்... படத்திற்கான முழு விடையும் இதோ...
2 x 3 = 6
3 x 4 = 12
4 x 5 = 20
5 x 6 = 30
6 x 7 = 42
9 x 10 = 90
ஒவ்வொரு எண்ணையும் வரிசைத்தொடரின் அடுத்த எண்ணோடு பெருக்கி இந்த புதிர் போடப்பட்டுள்ளது. இப்போது எளிதாக புரிந்து இருக்கும் என நம்புகிறோம்.












Click it and Unblock the Notifications