விஜய் அவசரப்பட்டு விட்டார்! அரசியல் எண்ட்ரி பற்றி ஃபார்வார்டு பிளாக் கதிரவன் கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: அரசியலுக்கு வருவதில் நடிகர் விஜய் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார் என ஃபார்வார்டு பிளாக் கட்சி மாநிலச் செயலாளர் கதிரவன் கிண்டல் அடித்துள்ளார். விஜய்க்கு இன்னும் காலம் இருப்பதாக கூறிய அவர், விஜய் அரசியல் வருகையால் திமுக, அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அது அவர்களது உரிமை என்றும் விஜய்க்கு வாய்ப்பில்லை என்று சொல்லவில்லை, வாய்ப்பிருக்கிறது ஆனால் அவசர முடிவெடுத்துவிட்டதாக பி.வி. கதிரவன் தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். 2011ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்று உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

Pv Kathiravan teased that actor Vijay has made a hasty decision to enter politics

நடிகர் விஜயை பொறுத்தவரை தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கக் கூடியவர். மார்க்கெட் குறையாதவர். நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கக் கூடியவர். இவ்வளவையும் அவர் உதறிவிட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வருகிறார். இதனை பலரும் பாராட்டி வரவேற்கும் நிலையில், ஃபார்வார்டு பிளாக் கதிரவன், விஜய் அவசரப்பட்டு விட்டதாக கூறியிருக்கிறார். சினிமாவில் ரிட்டையர்டு ஆகிய பிறகு பலரும் அரசியலுக்கு வருவார்கள். ஆனால் விஜய் அப்படியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்றத் தேர்தல் என்பதே தாமதம், இப்போதே அவர் கட்சியை தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என பழ.கருப்பையா வலியுறுத்தி வருகிறார். விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் 18 வயது முதல் 40 வயதுடையவர்கள் அதிகம் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கதிரவன் சொன்னதை போல் திமுக, அதிமுகவுக்கு வேண்டுமானாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சிறிய அரசியல் கட்சிகளில் உள்ள இளைஞர்கள் த.வெ.க. வுக்கு ஜம்ப் ஆகக் கூடும்.

அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று விஜயை அவசரப்பட்டுவிட்டார் எனக் கூறும் கதிரவனே வரும் காலத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் சேர்ந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+