Top IIT: வெளியானது உலகில் டாப் பல்கலைக்கழகங்களின் ரேங்கிங் பட்டியல்! தொடர் சாதனை படைக்கும் ஐஐடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:2027-ஆம் ஆண்டிற்கான சர்வதேச உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் பட்டியலில் டெல்லி ஐஐடி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கல்வி உலகில் ரிலீஸ் ஆகும் 'ஆஸ்கார்' விருதுகளைப் போன்றதுதான் 'கியூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை' (QS World University Rankings).

IIT Delhi Top

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் எந்த கல்லூரி சிறந்தது என்பது குறித்து இந்திய அளவில் என்ஐஆர்எஃப் ரேங்கிங் மூலமும் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைகளை கொண்டு உலக அளவிலும் அறிந்து கொள்கிறார்கள்.

இந்தியக் கல்வி நிறுவனங்களின் இந்த லேட்டஸ்ட் ரிப்போர்ட் கார்டை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. அரியணையில் ஐஐடி டெல்லி

இந்திய அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே முதலிடத்தைப் பிடிக்க ஐஐடி டெல்லிக்கும், ஐஐடி பாம்பேக்கும் இடையே அனல் பறக்கும் போட்டி நிலவி வருகிறது.

ஐஐடி டெல்லி (IIT-Delhi): தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய அளவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. உலக அளவில் 5 இடங்கள் முன்னேறி 118-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஐஐடி பாம்பே (IIT-Bombay): ஒரு காலத்தில் இந்தியப் பட்டியலில் டாப் கியரில் இருந்த இந்த நிறுவனம், இந்த முறை 129-லிருந்து 134-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் (IIT-Madras): நம்ம ஊர் ஐஐடி மெட்ராஸ், கடந்த ஆண்டை விட 10 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. உலக அளவில் 'டாப் 200' பட்டியலுக்குள் இருக்கும் மூன்றாவது இந்திய நிறுவனம் இதுவே ஆகும்.

2. இந்திய அளவில் 'டாப் 10' கல்வி நிறுவனங்கள் எவை?

இந்தியாவின் டாப் 10 இடங்களை வழக்கம் போல ஐஐடி-களே ஆக்கிரமித்துள்ளன. ஐஐடி டெல்லி (IIT-D)118 ஆவது இடத்தையும் ஐஐடி பாம்பே (IIT-B)134-ஆவது இடத்தையும் ஐஐடி மெட்ராஸ் (IIT-M) 1704ஆவது இடத்தையும் ஐஐடி கரக்பூர் 205-ஆவது இடத்தையும் ஐஐடி கான்பூர் 221-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

அது போல் இந்திய அறிவியல் கழகம் (IISc, பெங்களூரு) 221-ஆவது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் (DU) 322-ஆவது இடத்தையும், ஐஐடி ரூர்க்கி 335- ஆவது இடத்தையும், ஐஐடி கௌகாத்தி 349-ஆவது இடத்தையும் சூலினி பல்கலைக்கழகம் (இமாச்சல பிரதேசம்) 452-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

கவனிக்கத்தக்க சறுக்கல்: இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூரு ஐஐஎஸ்சி (IISc), கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 2023-ல் 155-வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம், தற்போது 221-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

3. தனியார் மற்றும் பிற மாநிலப் பல்கலைக்கழகங்கள்!

இந்த தரவரிசையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வியந்து பார்க்கும் வகையில் சில தனியார் மற்றும் மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன.

சூலினி பல்கலைக்கழகம் (Shoolini University): இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்தத் தனியார் பல்கலைக்கழகம், கடந்த ஆண்டு 503-வது இடத்தில் இருந்து இந்த முறை 452-வது இடத்திற்கு முன்னேறி இந்தியாவின் 'டாப் 10' பட்டியலுக்குள் நுழைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விஐடி (VIT, வேலூர்): ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இந்த முறை மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியது வேலூர் விஐடி தான். 94 இடங்கள் முன்னேறி 597-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிட்ஸ் பிலானி (BITS-Pilani): 93 இடங்கள் முன்னேறி 575-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்: ஜாமியா மில்லியா 75 இடங்கள் முன்னேறி டாப் 20 இந்திய நிறுவனங்களுக்குள் வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் 'ஆராய்ச்சி கட்டுரைகள்' (Citations) பிரிவில் உலக அளவில் 69-வது இடத்தைப் பிடித்து கெத்து காட்டியுள்ளது.

4. உலகத் தரவரிசை: டாப் 5 இடங்கள் யாருக்கு?

உலக அளவில் அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான எம்ஐடி (MIT) தொடர்ந்து 15-வது ஆண்டாக உலகின் நம்பர் 1 பல்கலைக்கழகமாகத் தனது சிம்மாசனத்தைத் தக்கவைத்துள்ளது.

MIT (அமெரிக்கா)

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)

இம்பீரியல் காலேஜ் லண்டன் (பிரிட்டன்)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்)

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)

உலக அளவில் டாப் 500-க்குள் இந்தியா பலமான இடங்களைப் பிடித்தாலும், இன்னும் முதல் 100 இடங்களுக்குள் ஒரு இந்திய நிறுவனம்கூட நுழைய முடியாமல் இருப்பது ஏன்? கியூஎஸ் அமைப்பின் மூத்த துணைத் தலைவர் பென் சோட்டர் (Ben Sowter) இதற்கான காரணங்களை விளக்குகிறார்.

"சர்வதேச ஈடுபாடு (International Engagement) மற்றும் மாணவர்-ஆசிரியர் விகிதம் (Faculty-Student Ratio) ஆகிய இரண்டிலும் இந்திய நிறுவனங்கள் இன்னும் பின்தங்கியே உள்ளன. இந்தியாவின் 'தேசிய கல்விக் கொள்கை 2050' இலக்கின்படி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயலும் அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த பேராசிரியர்களையும் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்ப்பதில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேகம் குறைவாகவே உள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனிக்கு நெருக்கடி - இந்தியாவிற்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு ஒரு பாசிட்டிவ் நியூஸ் என்னவென்றால், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளின் கல்வி நிறுவனங்கள் இந்த முறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவின் 67% பல்கலைக்கழகங்களும், ஜெர்மனியின் 78% பல்கலைக்கழகங்களும் தரவரிசையில் கீழே இறங்கியுள்ளன. மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை தேக்கநிலை இதற்கு முக்கியக் காரணம்.

மாறாக, உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியாவிற்கு, வரும் தசாப்தங்கள் பொற்காலமாக அமையப் போகின்றன என்பதை இந்த கியூஎஸ் அறிக்கை மறைமுகமாக உணர்த்துகிறது. 2026- 2027ஆம் ஆண்டு கல்லூரியில் சேரவுள்ள மாணவர்களுக்கு இந்த பட்டியல் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களும் எந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் தங்களுக்கு எதிர்காலம் என்பதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+