வலைவீசிய எடப்பாடி.. ‘தர்மருக்கு’ பரிசளித்த ‘தர்மயுத்தர்’ - விஸ்வாசத்தால் கிடைத்த 2வது லட்டு
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் 14 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அதில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 11 ஆம் தேதி சென்னையில் கூடிய அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

ஓபிஎஸ் தரப்பு நீக்கம்
அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேலும் 18 பேரை கட்சியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ஆர்.தர்மர் மிஸ்ஸிங்
எடப்பாடி பழனிசாமி நீக்குவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் பட்டியலில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் பெயர் இடம்பெறவில்லை. தர்மயுத்த காலத்திலும், அதன் பின்னரும், ஒற்றைத் தலைமை பிரச்சனையின்போதும் ஆர்.தர்மர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பக்கபலமாக நின்ற நிலையில் அவரை எடப்பாடி பழனிசாமி நீக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆர்.தர்மரை தன்வசம் ஈர்க்க எடப்பாடி தரப்பு முயல்வதாக அறிவித்தது.

யார் இந்த தர்மர்?
ஆர்.தர்மர் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராக இருந்தவர். ஆனாலும், தென் மாவட்டங்களை கடந்து மற்ற பகுதிகளில் அதிக அறிமுகம் இல்லாதவர் தர்மர். அதிமுகவின் நீண்ட கால உறுப்பினராக இருக்கும் ஆர்.தர்மர் தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு மாநிலங்களவை சீட் பெற்றுத் தருவதற்காக சில மாதங்களுக்கு முன் எடப்பாடி தரப்பிடம் போராடினார் ஓ.பன்னீர்செல்வம்.
Recommended Video

மீண்டும் மாவட்ட செயலாளர்
தர்மயுத்த சமயத்தில் ஓபிஎஸ் உடன் இருந்த மா.பா.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவிவிட்ட நிலையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இன்னும் ஓபிஎஸ் உடன் ஆர்.தர்மர் நிற்கிறார். அவரது விஸ்வாசத்துக்கு பயனாகவே தற்போது ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட 14 மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் ஆர்.தர்மரை மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக அறிவித்து உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications