விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை நண்பர்களே... பிளஸ் 2 மார்க் பற்றி மாதவன் ட்வீட்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட், எஸ்எஸ்எல்சி ரிசல்ட், தமிழகத்தில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. மாணவர்கள் உயர்கல்விக்கு தயாராகி விட்டனர். மார்க் குறைவாக எடுத்தவர்கள் மனக்கவலையில் இருக்கிறார

Subscribe to Oneindia Tamil

சென்னை: விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை நண்பர்களே என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். தனது பிளஸ் 2 மதிப்பெண் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துக்கள், ஊக்கப்படுத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் மாதவன். சிலர் எதிர்பார்ப்புகளை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம். நான் பிளஸ் 2வில் 58 சதவிகிதம் மதிப்பெண்தான் பெற்றிருக்கிறேன். விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை நண்பர்களே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மாதவனின் இந்த பதிவு பலரது மனதை தொட்டுள்ளது. உங்க நேர்மை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மாதவன் என்று பாராட்டியுள்ளனர். 3 இடியட்ஸ் படத்தில் நடித்திருந்த மாதவன், தனது மனதிற்கு பிடித்த துறையை தேர்வு செய்வார். பள்ளி படிப்பிற்குப் பிறகான வாழ்க்கைதான் உண்மையான விளையாட்டு என்று உணர்த்தும் வகையில் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

பிளஸ் 2 படிப்பிற்குப் பிறகு உயர்கல்வியை தேர்வு செய்து மேல்படிப்பிற்காக உழைப்பதில்தான் இருக்கிறது மாணவர்களின் வெற்றி. மாதவனின் இந்த ட்விட்டர் பதிவு பலருக்கும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தரக்கூடும்.

மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையா

மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையா

அழகான நாயகர்கள் எல்லோருமே புத்திசாலித்தனமாக இருப்பதில்லை. பிளஸ் 2வில் 58 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற மாதவன், பட்டப்படிப்பில் தேர்வு செய்தது பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ். மும்பையில் புகழ் பெற்ற கல்லூரியில் முதுநிலை படிக்கும் போதுதான் கலைத்துறையில் மாதவனின் பயணம் தொடங்கியது. சினிமாவிற்கு வரும் முன்பு சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார் மாதவன். தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாக்களிலும் தடம் பதித்து வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

சாக்லேட் பாய் மாதவன்

சாக்லேட் பாய் மாதவன்

இந்தி சின்னத்திரை தொடர்களில் பயணத்தை தொடங்கிய மாதவனுக்கு தமிழ் சினிமா உலகில் மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' மூலம் அற்புதமான வாய்ப்பு அமைந்தது. அந்த படத்திற்குப் பிறகு சினிமா உலகில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள அதிகம் போராடத்தான் வேண்டியிருந்தது. சாக்லேட் பாய் லுக் நிறைய ரசிகைகளை பெற்றுக்கொடுத்தது. மேடி என்று அனைவரையும் உருகவைத்தார் மாதவன்.

தம்பி மாதவன்

தம்பி மாதவன்

லிங்குசாமியின் 'ரன்' படம் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறினாலும் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறவில்லை. மனம் தளராமல் தனது வெற்றிக்காக காத்திருந்த மாதவனுக்கு அமைந்தது சீமான் இயக்கிய 'தம்பி' படம். அந்த படத்தில் நடிப்பின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தினார். தோல்விகள் வந்தாலும் துவண்டு விடாமல் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என சரியான கதைகளை தேர்வு செய்து நடித்ததன் மூலம் 20 ஆண்டுகளாக திரை உலகில் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

Recommended Video

    12th Exam Results: இப்பவும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி
    மாதவன் இயக்குநர் அவதாரம்

    மாதவன் இயக்குநர் அவதாரம்

    சமூக வலைத்தளங்களில் மாதவனை சீண்டும் விதமாக பதிவுகள் வந்தாலும் அதற்கு சரியான பதிலடியும் கொடுப்பார் மாதவன். நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி: நம்பி விளைவு என்ற படத்தை தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் எடுப்பதோடு நடித்தும் வருகிறார்.

    மாணவர்களுக்கு உற்சாக பதிவு

    மாணவர்களுக்கு உற்சாக பதிவு

    பிளஸ் 2 வந்த பின்னர் மதிப்பெண்களைப் பார்த்து பல மாணவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகி விடுகின்றனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் தான் பிளஸ் 2வில் எடுத்த மதிப்பெண் சதவிகிதத்தை குறிப்பிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார் மாதவன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+