Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு!
சென்னை: பெற்றெடுத்த தாய், தந்தை, கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகளுக்கு கடன் கொடுத்தேன் என்பதை வேட்புமனுவில் சொத்து விவரங்களில் யாராவது குறிப்பிடுவார்களா என விஜய்யை மறைமுகமாக கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டி என்கிறார்கள். அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, ராமதாஸ்- சசிகலா அணி என 5 முனை போட்டி என்கிறார்கள்.

4, 5, 6 என அணிகள் அதிகமாகிக் கொண்டிருப்பது வேறு விஷயம்! ஆனால் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் ஒருவர், திரைப்படத்தில் கிடைத்த ஆதரவின் மூலமாக அரசியலிலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறார். அதில் தவறில்லை.
ஆனால் அரசியல் வேறு, திரைப்படத் துறை வேறு என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே ஆகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேசன், தனிக்கட்சி தொடங்கி, 1989 ஆம் ஆண்டு திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜியின் தேர்தல் முடிவுகள் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
வெற்றித் தோல்வி என்பது அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு அரசியல் கட்சி தலைவர் வரவு செலவு, சொத்து விவரங்களை எல்லாம் தேர்தல் ஆணையத்தில் கொடுக்க வேண்டியிருக்கிறது. எவ்வளவு சொத்து, எத்தனை ஆயிரம் கடன் இருக்கிறது என்பதையெல்லாம் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு விஜய்யும் கணக்கு கொடுத்த போது, அப்பாவுக்கு, அம்மாவுக்கு, மனைவிக்கு, மகனுக்கு, மகளுக்கு கடன் கொடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட ஒருவரை யாராவது இதுவரை பார்த்திருக்கிறோமா? இதுதான் அரசியல் கூத்து!
கூட்டம் கூடுவது என்பது பொதுவாக திரைப்படத் துறையில் இருக்கக் கூடிய நடிகர், நடிகைகளை பார்க்க ஒரு கூட்டம் வரும். இது இயல்பானது. பார்க்க வரும் கூட்டம் வேறு. பேச்சை கேட்க வரும் கூட்டம் வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
முதல்வருக்கு வரும் கூட்டம் பேச்சை கேட்பதற்கு வரும் கூட்டம். விஜய்க்கு வரும் கூட்டம் அவரை பார்க்க வரும் கூட்டம். எனவே பார்ப்பதும் கேட்பதும் ஒன்றாகிவிடாது. பல சித்து வேலைகள், சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வாக்குகளை பிரிப்பதன் மூலமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து விடலாம் என்று பாஜக விரித்த வஞ்சக வலையில் தவெகவும் இணைந்திருக்கிறது.
அவர் நடித்த கடைசி படமான ஜனநாயகன் வராமல் போனதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தணிக்கை வாரியம் தான் அதற்கு பொறுப்பு. மாநில அரசிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
திருச்சியில் வேட்புமனு தாக்கலின் போது விஜய், ஜனநாயகன் படம் பாஜக, திமுகவால்தான் வெளியே வரவில்லை என்கிறார். அதாவது பாஜகவின் பெயரை சொல்லாமல் பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி என்கிறார், முழுக்க முழுக்க திமுக அரசையே விமர்சிக்கிறார். அந்த வகையில் யாருக்கு பினாமியாக அந்த தலைவர் செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மொத்தத்தில் இந்த தமிழக சட்டசபை தேர்தல் என்பது தமிழக மக்களுக்கும் டெல்லிக்கும் நடக்கக் கூடிய ஒரு யுத்தம். இந்த அரசியல் போராட்டத்தில் தமிழக மக்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை?












Click it and Unblock the Notifications