சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பின்னால் இருந்து இயக்கும் முகம் யார்? நடிகர் பார்த்திபன் புகார்
சென்னை: சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகரும் எழுத்தாளருமான ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில உள்ள காவல் அருங்காட்சியகததை நடிகர் பார்த்திபன் நேற்று மாலை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொது மக்கள அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியகம்.
காவல் துறை நம் நண்பன். நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திரத்திற்கு காவல் துறையினர் உதவியாக இரு்நதவர்கள். காவல் துறைக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மது அருந்துவது
சாலையில் செல்லும் போது மது அருந்துவது, விதிகளை மீறி செல்லும் போது காவல் துறையிடம் வாக்குவாதம் செய்து அதை வீடியோவாக எடுப்பது இப்போது அதிகம் இருக்கிறது. காவல் துறைக்கு நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்போதுதான் நமக்கான சுதந்திரம் நமக்கான சந்தோஷம் கிடைக்கும்.

சிக்னல்
சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்திருந்தாலும் 10 குழந்தைகள் சிக்னலில் பிச்சை எடுப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது. பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்த்திபன் கோரிக்கை விடுத்தார்.

பொன்னியின் செல்வம்
மேலும் அவர் கூறுகையில் பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சாம்பாரில் இருக்கும் வெங்காயம் போன்று இருக்கும். சாம்பாரில் இருக்கும் வெங்காயம் போன்று இருக்கும். சாம்பாரில் உள்ள வெங்காயம் சுவையானது அந்த அளவுக்கு என்னுடைய கேரக்டரும் இருக்கும்.

திருடர்கள்
அடுத்தபடியாக திருடர்களை படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். பயப்படாதீங்க.. அவர்கள் இதயததை திருடுபவனாக இருக்கும் என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக தெரிவித்தார் பார்த்திபன். சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார் என்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாக்யராஜ் கூறியுள்ளார். இதே போல் சென்னையில் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிச்சைக்காரர்கள் வேடத்தில் திருடர்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கை கால்களில் போலியான கட்டு கட்டி கொண்டு பகலில் பிச்சைக்காரர்கள் போலவும் இரவு நேரத்தில் திருடர்களாகவும் வலம் வருவதாக புகார்கள் சொல்லப்பட்டுள்ளன. இதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications