பாயிண்ட் பாயிண்ட்டாக அம்பிகா மீது புகார் சொன்ன ராதா.. இன்னைக்கு விசாரணைக்கே வரலையாமே? இதுதான் காரணம்
சென்னை: அம்பிகா, ராதா சொத்து பிரச்சனை இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. ரூ.49 கோடி செக் தொடர்பான புகாரில் ராதா இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வரவில்லை. இதற்கான காரணம் என்ன? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதுதான் இப்போது கேள்வியாகியுள்ளது.
1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. இருவரும் அப்போது டாப் ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்தனர். பல வருடங்களாகவே நெருக்கமாக இருந்த சகோதரிகளுக்கு இடையே இப்போது திடீரென சொத்து விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

நடிகை ராதா புகார்
இந்த நிலையில், நடிகை ராதா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் நடிகர் மல்லிகார்ஜுனன் மீது புகார் அளித்தார். தான் வசித்து வந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்திட்ட 5 வெற்று காசோலைகளை மோசடியாக பயன்படுத்தி, சுமார் ரூ.49 கோடியை அபகரிக்க முயற்சி செய்ததாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக அம்பிகா தரப்பும் உடனடியாக விளக்கம் அளித்தது. "ராதா கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட் தொகை தொடர்பாக அவர் வழங்கிய செக்குகள்தான் அவை.. அந்த செக்கை ராதாதான் கொடுத்தார்.
போரூர் ஏ.ஆர்.எஸ் கார்டன்
போரூர் ஏ.ஆர்.எஸ் கார்டன் யாருக்குச் சொந்தம் என்பதுதான் பிரச்சனையின் முக்கிய காரணம்.. ஏ.ஆர்.எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணமாக நான்தான் இருந்தேன்.. ஆனால் என்னுடைய பெயர் அந்த சொத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.. என்னுடைய பெயரில் இருந்த தங்க நகைகளும் ராதாவிடம் இருக்கிறது.. சொத்துகளைப் பிரித்த வகையில் ராதா எனக்கு 5 காசோலைகளை வழங்கினார்.
ராதா தரப்பிடமிருந்து எனக்கு ரூ.97 கோடி இன்னும் வர வேண்டியுள்ளது.. ஏ.ஆர்.எஸ் கார்டன் பங்கிலும் எனக்கு பங்கு வழங்கப்பட வேண்டும். ராதாவின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடி வரை இருக்கும்.. நான் மட்டும் உண்மையை முழுமையாக சொன்னால் ராதா ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்' என்றெல்லாம் செய்தியாளர்களிடம் அம்பிகா விளக்கம் தந்திருந்தார்.
இப்படி ராதாவும் அம்பிகாவும் இந்த விவகாரம் குறித்து முற்றிலும் மாறுபட்ட தகவல்களை கூறியதால், உண்மையில் நடந்தது என்ன என்ற கேள்வி சோஷியல் மீடியா முழுக்க எழுந்தது. இதனிடையே, ராதா அளித்த புகார் தொடர்பாக அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
ராதா, அம்பிகா குற்றச்சாட்டுகள்
இதற்காக குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களுடன் செப்டம்பர் 24-ம் தேதி அதாவது இன்றைய தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகுமாறு ராதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. முதலில் ராதாவிடம் முழுமையான விசாரணை நடத்திவிட்டு, அதன் அடிப்படையில் அம்பிகாவுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
விசாரணைக்கு வரவில்லை
ஆனால், எதிர்பார்த்தபடி இன்று ராதா விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லாததால் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றிருப்பதாகவும், வேறு ஒரு நாளில் விசாரணைக்கு ஆஜராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விசாரணைக்கு ஆஜராக புதிய தேதியை தனது வழக்கறிஞர் மூலம் ராதா கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரூ.49 கோடி காசோலை புகார், ரூ.97 கோடி வர வேண்டியிருப்பதாக அம்பிகா சொல்வது, ஏ.ஆர்.எஸ் கார்டன் சொத்து தொடர்பான சர்ச்சை என ஏற்கனவே விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், ராதா இன்று விசாரணைக்கு வராததும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ராதா அடுத்ததாக எப்போது ஆஜராகிறார், அப்போது அவர் அளிக்கும் விளக்கம் என்ன என்பதில்தான் இந்த சொத்து பிரச்சனையின் அடுத்த கட்டம் இருக்கிறது..!!!


Click it and Unblock the Notifications
