சென்னையில் வாகனம் நிறுத்தும் இடங்கள்.. வரப்போகுது புதிய முறை.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் முக்கிய தகவல்
சென்னை: சென்னை மாநகர எல்லைக்குள் மட்டுமே பல லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள். இவர்கள் வைத்துள்ள வாகனங்களுக்கு ஏற்ப வாகன நிறுத்தங்கள் தற்போது சென்னையில் இல்லை. இந்நிலையில் இரண்டு லட்சம் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு வாகனங்கள் இருக்கின்றன. கடந்த சில வருடங்களில் சென்னையில் நம்ப முடியாத அளவிற்கு கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ற அளவில் சாலைகள் இல்லை என்பது கசப்பான உண்மை.

இந்த சூழலில் பல வாகனங்கள் பல சாலையோரங்களிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மோசமாக ஏற்படுகிறது. பல சாலைகள் வாகன நிறுத்தம் போல் பயன்படுத்தப்படுவதை தடுக்க என்ன செய்வது என்று அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள்.
சென்னையில் பெரும்பாலான வீடுகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு நிறுத்துமிடம் இல்லை. சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள நெருக்கமான பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை கூட நிறுத்த வசதிகள் இல்லை. பலரும் சாலையோரங்களை, வாகன நிறுத்துமிடங்களாக பயன்படுத்துகிறார்கள். இதுவே சென்னையில் நடக்கும போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாகவும் இருக்கின்றன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் வாகன நிறுத்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் அமைக்கப்பட்டிருக்கிறது.இந்தகுழு சென்னையின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து,வாகன நிறுத்த நடைமுறைகளை மேம்படுத்த என்ன செய்யலாம் என அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது,
வாகன நிறுத்துமிடத்தின் தற்போதைய நிலை, சவால்கள், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் என்ன, எதிர்காலத்தில் என்ன செய்தால் நெருக்கடி நிலை வராது என்பது குறித்து மாநகராட்சிக்கு வழிகாட்டுதல்களையும் வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் எதிர்கால வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
இதுபற்றி சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்புகளில், வாகன நிறுத்தங்கள் கட்டாயம் கட்டப்படுகின்றன. ஆனால், பழைய கட்டடங்களில் அதற்கான வசதி குறைவாகவே இருக்கின்றன. இதனால் பலர் சாலையோரங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துகிறார்கள்.
இவற்றை ஒழுங்கும்படுத்தும் வகையில், 2 லட்சம் வாகனங்கள் நிறுத்தும் வகையில், நகரின் பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க உள்ளோம். சில இடங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வாகன நிறுத்துமிடங்களாகவும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளோம்" என்றார்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கூறுகையில், "சென்னை பாண்டிபஜாரில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்துள்ளோம். இப்போது பெரும்பாலோனோர் சாலையோர வாகன நிறுத்தங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.
சென்னை மாநகராட்சியில் தற்போது, 12,000 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . வாகன நிறுத்தங்களை மேலாண்மை செய்ய, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பம், வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதன்பின்னர் மண்டல வாரியாக வாகன நிறுத்தமிடங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வணிக வளாகம், திரையரங்குகளில் வாகன நிறுத்தம் ஒழுங்குப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.
சென்னையில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் அங்கு தான் வாகனங்களை நிறுத்தும் நடைமுறை வர அதிக வாய்ப்பு உள்ளது.கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க புதிய நடைமுறை விரைவில் வர வாய்ப்பு உள்ளது. இப்போதே சென்னையில் சில பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட முடியாது. அதுபோல் சென்னை முழுவதும் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications