ரிட்டயர் ஆகும் நேரத்தில்.. ராதாகிருஷ்ணன் IASக்கு பவர்ஃபுல் போஸ்ட் தந்த விஜய்.. கொதிக்கும் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு பெறும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சிலர் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளனர். மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த ராதா கிருஷணனை ஜூலை மாதம் அங்கிருந்து இடமாற்றம் செய்தது தவெக அரசு. மிகச் சாதாரண பதவியில் நியமிக்கப்பட்டார் ராதாகிருஷ்ணன்.

மிகப் பெரிய ஒரு பதவி வழங்குவதற்காகத்தான் அந்த டம்மி போஸ்டிங்கில் நியமிக்கப்பட் டார். இந்த நிலையில், இம்மாதம் இறுதியில் ஓய்வு பெறவிருக்கும் ராதாகிருஷ் ணனை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் பதவி யில் நியமித்தது தவெக அரசு. அக்டோபர் 1-ந்தேதி இந்த பதவியில் சார்ஜ் எடுத்துக்கொள்ளவிருக்கிறார்.

vijay Radhakrishnan ias

ஓய்வு பெறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மீண்டும் பவர் ஃபுல் போஸ்டிங் வழங்குவதாக தவெக அரசு மீது அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்ற னர். அதாவது, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனாக பனீந்தர்ரெட்டி ஐ.ஏ.எஸ்., உறுப்பினராக ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஐ.ஏ.எஸ். ஆகிய இருவரையும் அவர்கள் பணி ஓய்வு பெற்றதுமே மேற்கண்ட அதிகாரம் மிக்க பதவியில் நியமித்தார் தலைமைச்செயலாளர் சாய்க்குமார்.

முதல்வர் விஜய்யின் அனுமதியுடனே இந்த பதவியில் அவர்கள் நியமிக்கப் பட்டனர். ஓய்வு பெறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மீண்டும் பதவியா? என்று அப்போதே சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில் தான் ராதாகிருஷ்ணன் நியமனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

இது மட்டுமல்லாமல், மின்சார வாரியத்தின் சி.எம்.டி. யாக (சேர்மன் கம் மேனேஜிங் டைரக்டர்) ராதாகிருஷ்ணன் இருந்தபோதுதான் மின்மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்கள்) கொள்முதல் முறைகேடுகள் (397 கோடி), ஹார்ட் டிஸ்க் குகள் மாயமான விவகாரம் ஆகியவை நடந்தன. மின்மாற்றி கொள்முதல் முறைகேடுகள் அம்பலமானதால் இதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மின்மாற்றி கொள்முதலுக்கான டெண்டர்கள், டெண்டர் முடிவுகள் குறித்து எடுக்கப்பட்ட பரிசீலனை குழுவில் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு அதிகாரிகள் இருந்தனர். அந்த வகையில் இந்த முறைகேடுகள் நடந்த காலக்கட்டத்தில் பல உத்தரவுகளை பிறப்பித்தி ருக்கும் ராதாகிருஷ்ணனை, மின்சாரம் கொள்முதல் மற்றும் மின்கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களை கையாளும் அதிகாரமிக்க ஒழுங்கு முறை ஆணையத்தின் உயர் பொறுப்பில் நியமிக்கப்பட்டது எந்த வகையில் ஆரோக்கியமானதாக இருக்கும்?

இந்த முறைகேடு விவகாரத்தில் அவர் காப்பாற்றப்பட்டதாக மின் வாரிய ஊழியர்கள் மத்தியில் சந்தேகம் இருக்கும் நிலையில், அவரையே மீண்டும் அதிகாரம் மிக்க பதவியில் அமர்த்துவதன் மூலம் ஆதாரங்களை அழித்துவிட மாட்டாரா? என்று கேள்வி எழுப்பும் ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர்கள், இது குறித்து வழக்கு தொடர, ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகப் போராடும் சில அமைப்புகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்கள். ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றதற்கு பிறகு இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என தெரிகிறது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+