டிவி சீரியல்களுக்கு குட்பை.. அரசியலில் இனி ஃபுல்டைமாக களமிறங்க போகிறேன்.. ராதிகா தடாலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ராதிகா. இவர் நடிகவேல் எம்ஆர் ராதாவின் மகளாவார். 1980 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். 2020ஆம் ஆண்டு வானம் கொட்டட்டும் படம் வெளியானது.

இதையடுத்து இந்த ஆண்டு 5 படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படியாக அவரது பெரிய திரை இருக்க சின்னத்திரையிலும் அவர் சாதனைகளை படைத்து வருகிறார்.

சித்தி 2

சித்தி 2

இவர் ராடான் என்ற சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, தாமரை, சித்தி 2 ஆகிய சீரியல்களை தொடங்கி தாமரையை தவிர்த்து மற்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

பிரைம் டைம்

பிரைம் டைம்

இவரது சீரியலுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அலுவலகம் செல்வோர் கூட இரவு 9.30 மணி ஆனால் ராதிகாவின் சீரியலை பார்க்க ஆஜராகிவிடுவார்கள். அந்த சீரியலை பார்த்துவிட்டுதான் தாய்மார்கள் உலையே வைக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. குடும்ப பாங்காக இருக்கும் இவரது சீரியல்களை ராதிகாவின் அதிரடியான நடிப்புக்கு ரசிகர் பட்டாளமே உண்டு.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

எந்த சீரியல் பார்க்கிறார்களோ இல்லையோ ராதிகாவின் சீரியலை பார்க்காதவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். 1999 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் கால் பதித்த ராதிகா "சித்தி" சீரியலை தயாரித்து நடித்தார். தற்போது அதன் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அரசியல்

அரசியல்

இந்த நிலையில் ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கையில் சின்னத்திரையிலிருந்து படிப்படியாக விலகி கணவருடன் இணைந்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபடுவேன் என ராதிகா தெரிவித்துள்ளார்.

தனி சின்னம்

தனி சின்னம்

இவரது கணவர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒன்றை தொடங்கியுள்ளார். 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சரத்குமார். தற்போது வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட மும்முரம் காட்டி வருகிறார். அவர் கூறுகையில் ஒரு சீட்டு அல்லது இரண்டு சீட்டுகளுக்காக அரசியலில் இருக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+