சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வார்ரே வா.. திடீரென புயலை கிளப்பும் ராதிகா.. மிரண்டு பார்க்கும் சரத்குமார்.. செம ஹேப்பியில் சமகவினர்

ராதிகா சரத்குமாரின் பேச்சு அனல் தெறிக்க தொண்டர்களை ஈர்த்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ராதிகா புயலாக மாறி விட்டார்.. சரத்குமாருடன் இணைந்து அவர் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டார். இது சரத்குமாருக்கு மட்டுமல்லாமல் அவரது கட்சி தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.

அரசியலில் பெண்கள் கோலோச்சும் காலம் இது. இவர்களுக்கெல்லாம் சிறந்த வழிகாட்டி இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்றோர்தான். தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஜெயலலிதா மட்டுமே வெற்றிகரமான ஒரு பெண் தலைவராக இருக்கிறார்.

Recommended Video

    கோவை: கூட்டணியில் 234 தொகுதி வெற்றியையும் எதிர்பார்க்கிறோம்... சரத்குமார் பேட்டி!

    அவரது இடத்தை யாருமே இன்னும் இட்டு நிரப்பமுடியவில்லை. ஏன் அவரது நிழலுக்கு அருகே கூட யாராலும் வர முடியாத நிலைதான் உள்ளது. பெண்கள் என்று இல்லாமல் ஆண்களுக்குமே பெரும் சவாலாக, சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் என்றால் அது நிச்சயம் ஜெயலலிதாதான்.

     ராதிகா

    ராதிகா

    தமிழக அரசியல் களத்தில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார். ராதிகா இருக்கிறார். குஷ்பு இருக்கிறார். இளம் தலைவர்களாக பலரும் உள்ளனர். ஆனால் யாருமே ஜெயலலிதா இடத்தை நிரப்பமுடியவில்லை என்பதே எதார்த்தம். இருப்பினும் தங்களது கணவர்களுக்கு சிறந்த பக்க பலமாக இருக்கும் பெண் தலைவர்கள் என்ற பெருமை பிரேமலதாவுக்கும், ராதிகாவுக்கும் நிச்சயம் உண்டு.

     துணை

    துணை

    விஜயகாந்த் என்ற புயலை மிகத் திறமையாக கையாண்டவர் பிரேமலதா. விஜயகாந்த் போக்கில் போக விட்டு அவரது இழுப்புக்கெல்லாம் ஒத்துப் போய்.. அவருக்கு சரியான துணையாக வலம் வருபவர் பிரேமலதா. அதில் சந்தேகமே இல்லை. மனைவியின் ஒத்துழைப்பும், அவரது ஆர்வமும், ஈடுபாடும்தான் விஜயகாந்த்தை நல்லதொரு தலைவராக பரிமளிக்க வைத்தது என்று கூட கூறலாம்.

     முணுமுணுப்பு

    முணுமுணுப்பு

    துரதிர்ஷ்டவசமாக அவர் உடல் நலம் குன்றிப் போனதைத் தொடர்ந்து பிரேமலதா தற்போது கட்சியை வழி காட்டி நடத்தி வருகிறார். பிரேமலதா என்ற ஆளுமைக்குள் இப்போது தேமுதிக இருக்கிறது. அவர் மீது ஆயிரம் சர்ச்சைகள், புகார்கள், முணுமுணுப்புகள் இருந்தாலும் கூட விஜயகாந்த் உருவாக்கிய கட்சியை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் பிரேமலதா என்பதில் சந்தேகம் இல்லை.

    கலையரசி

    கலையரசி

    இப்போது அதேபோல இன்னொரு பெண் தலைவர் பட்டையைக் கிளப்ப வந்துள்ளார். அவர்தான் கலையரசி என்று ரசிகர்களால் போற்றப்படும் ராதிகா. இதுவரை ராதிகா ஆக்டிவான அரசியலில் ஈடுபட்டதில்லை. அதெல்லாம் திமுகவுடன் போய் விட்டது. அதிமுகவுக்கு சரத்குமார் போனபோதும் கூட ராதிகா ஒதுங்கித்தான் இருந்தார். ஏன் சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் ஆரம்பித்த பிறகும் கூட ராதிகா பெரிதாக ஈடுபாடு காட்டியதில்லை. இத்தனைக்கும் மகளிர் அணித் தலைவி அவர்தான்.

     ஆச்சரியம்

    ஆச்சரியம்

    ஆனால் தற்போது தனது சீரியல்களை கூட நிறுத்தி விட போவதாக கூறி விட்டு புயல் போல அரசியல் பயணத்தைத் தொடங்கி விட்டார் ராதிகா. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சரத்குமாரே கூட இதனால் ஆச்சரியப்பட்டு போயிருப்பார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சரத்குமாருடன் இணைந்து தமிழகத்தை வலம் வர ஆரம்பித்துள்ளார் ராதிகா.

     புத்துணர்ச்சி

    புத்துணர்ச்சி

    போகும் இடமெல்லாம் சரத்குமார் ஒரு பக்கம் முழங்குகிறார் என்றால் மறுபக்கம் இரட்டைக் குழல் துப்பாக்கி போல ராதிகாவும் அதகளம் செய்கிறார். சமத்துவ மக்கள் கட்சியே ஒரு புத்துணர்ச்சியை இதனால் பெற்று விட்டது என்று கூட கூற முடியும். அந்த அளவுக்கு ராதிகாவின் வருகை அக்கட்சியினருக்கு புது உணர்வை கொடுத்துள்ளது. கணவருக்கு துணையாக என்று மட்டும் இல்லாமல், அவரது கரத்தை பலப்படுத்தும் வகையில் ராதிகாவும் இணைந்திருப்பது சமகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தேமுதிக

    தேமுதிக

    வரும் தேர்தலில் ராதிகாவும் ஒரு பீரங்கிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று நம்பலாம். அந்த வகையில் பிரேமலதா, ராதிகா, குஷ்பு என பெண் தலைவர்களின் அதிரடி பிரச்சாரம் இந்த முறை தூக்கலாகவே இருக்கும் என்று நம்பலாம். பார்க்கலாம், பிரேமலதாவால் தேமுதிகவுக்கு ஏற்றம் கிடைத்தது போல, ராதிகாவால் சமக நிமிருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    English summary
    Radhika sarathkumar going to start her campaign for AISMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X