கூட்டமே இல்லை.. இங்கே என்ன பண்றது? சிரிப்பை மறந்த "சித்தி".. பாதியில் சென்னைக்கே புறப்பட்ட ராதிகா
சென்னை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட்டார்.
2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவில் இணைத்தார் சரத் குமார். அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

இதையடுத்து பாஜகவின் விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த இவர் அங்கே பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு, பரப்புரையை ரத்து செய்து சென்னை புறப்பட்டுச் சென்றார். சிரித்த முகத்தோடு வந்தவர்.. கூட்டம் இல்லாததால் சிரிப்பை மறந்து டென்சன் ஆனார்.
கூட்டம் வரும் என்று காத்திருந்தவர் கடைசியில் அங்கிருந்து சென்றார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டம் சேரவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்
அங்கே ராதிகாவை வேட்பாளராக நியமித்ததை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. நேற்று விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் விருதுநகரில் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று கூட்டத்தில் ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர்வாகிகள் யாரும் வராமல் ஏமாற்றம் அளித்துள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
பிரமாண பத்திரம்: இந்த நிலையில்தான் ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி ராதிகா சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:
அசையும் சொத்து மதிப்புகள்: 27 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 26 கோடி ரூபாய்
அதன்படி சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:
அசையும் சொத்து மதிப்புகள்: 8 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 21 கோடி ரூபாய்
ராதிகா சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 6 கோடி ரூபாய்
சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 8 கோடி ரூபாய்
இரண்டு பேரும் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை மூலம் அரசுக்கு செலுத்தாமல் வைத்துள்ளனர்.
ராதிகா சரத்குமாருக்கு உள்ள கடன் 14 கோடி ரூபாய்
சரத் குமாருக்கு உள்ள கடன் 19 கோடி ரூபாய்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications