"விடுங்க.. கண்டதெல்லாம் எழுதறாங்களே.. வெறும் உடம்பு வலிதான்".. ராதிகா போட்ட போடு...!
ராதிகா சரத்குமார் தனக்கு தொற்று பாதிப்பு இல்லை என ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: எனக்கு வெறும் உடம்பு வலி தான்.. கொரோனா எல்லாம் கிடையாது.. நான் வேலைக்கு வந்துட்டேன்.. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன.. என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த முறை தேர்தலில் ராதிகாவின் பெயர் நிறைய அடிபட்டு வருகிறது.. தன் கட்சிக்காக பல இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார் ராதிகா..
அப்போது மக்கள் ராதிகாவிடம் பாசத்தை பொழிந்துவிட்டனர்.. சில இடங்களில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ராதிகா திணறியும் போனார்.

பரபரப்பு
இந்நிலையில், திடீரென சரத்குமார், ராதிகா குறித்த வழக்கு விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. மோசடி வழக்கில் ராதிகாவுக்கும் சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை என்ற செய்தி பரவியதும், ராதிகாவா இப்படி? சரத்குமார் ஏன் இப்படி செய்தார்? உண்மைதன்மை என்ன? என்ற அதிர்ச்சி கேள்விகள் மக்கள் மனசிலும் எழுந்தன..

பாதிப்பு
ஆனால், வழக்கு முறையாக நடந்து வருவதால் இதை பற்றி அவ்வளவாக யாரும் அதற்கு பிறகு பேச்செடுக்கவில்லை. இந்த சமயத்தில்தான், ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்றும், சென்னையில் இருக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது... இதனால் ராதிகாவுக்கு என்ன ஆச்சோ ஏதேச்சோ என்று ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்..

வாழ்த்துக்கள்
அதற்கேற்றபடி ராதிகாவும் ட்விட்டர் பக்கம் 2 நாளாக ஆளை காணோமே என்றும் தவித்தனர்.. ராதிகா குணமாக வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.. இந்நிலையில், ராதிகாவே தற்போது ன் உடல்நிலை குறித்து விளக்கம் தந்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

தடுப்பூசி
அந்த ட்வீட்டில், எல்லாருடைய அன்புக்கும் நன்றி... என்னு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் கிடையாது.. தடுப்பூசியின் 2வது டோஸ் எடுத்துக்கிட்டேன்.. அதுக்காக உடம்பு வலி மட்டுமே.. என்னுடைய உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகிறார்கள். நாங்கள் வழக்கு தொடர்பாக மேல்கோர்ட்டில் முறையிடுவோம். இப்போ நான் வேலைக்கு வந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். ராதிகாவின் இந்த ட்வீட்டை பார்த்த பிறகுதான் ரசிகர்கள் தரப்பு நிம்மதி ஆகி உள்ளது.












Click it and Unblock the Notifications