'பட்டு சேலை திட்டம்' புதிதாக தொடங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்.. அரசியல் வருகைக்கு முன்னேற்பாடா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாரன்ஸ் அறக்கட்டளை சார்பாக 5 ஆயிரம் பெண்களுக்கு பட்டு சேலை வழங்கும் திட்டத்தை தொடங்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். பெண்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த இந்த முன்னெடுப்பை மேற்கொள்வதாக கூறிய லாரன்ஸ், அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடித்து முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது தொடர்பாக வீடியோ வெளியிட்டார். தனது தாய் அரசியலுக்கு செல்ல அனுமதி வழங்கிவிட்டதாக கூறிய ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் லாரன்ஸை அதனை மறுத்திருந்தார்.

Raghava Lawrence

இருப்பினும் பரபரப்பாக அரசியலுக்கு வருவதாக கூறிய லாரன்ஸ், திடீரென சைலண்ட் மோடுக்கு சென்றார். உடனடியாக சினிமா பணிகளில் அதிக ஆர்வம் காட்டியதோடு பல்வேறு பட அறிவிப்புகளையும் வெளியிட்டார். இதனால் ராகவா லாரன்ஸ் தற்போது அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. லோக்சபா தேர்தலின் போது லாரன்ஸ் அரசியல் பக்கம் திரும்பலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி 5 ஆயிரம் பேருக்கு பட்டு சேலை வழங்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் லாரன்ஸ், லாரன்ஸ் அறக்கட்டளை 20 ஆண்டு கால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த வேளையில் பட்டு சேலை திட்டம் எனும் புதிய முன்னெடுப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சி. 20 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், உணவு வழங்குதல் என்று பல்வேறு நற்பணிகளை செய்து வந்துள்ளது. இந்த சூழலில் ஒரு பெண் என்னிடம் வந்து தனக்கு ஒரு அழகான பட்டுப்புடவை வேண்டும் என்று கடிதம் ஒன்றை வழங்கினார்.

அந்த கடிதத்தை படித்த போது கிராமங்களில் வாழும் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பட்டுப்புடவையை கூட பார்த்திருக்கவோ அல்லது அணிந்திருக்கவோ வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருப்பார்கள் என்று சிந்தித்தேன். அதனால் முதற்கட்டமாக 5 ஆயிரம் பட்டுப்புடவையை வழங்க திட்டமிட்டுள்ளேன். அனைத்து தாய்மார்களின் ஆசியைப் பெற வேண்டும் என்ற எளிய நோக்கத்தோடு இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.

என்னுடைய பிறந்தநாளான அக்டோபர் 29ல் நான் வளர்ந்த ராயபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். இந்த ஒபுதிய முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். லாரன்ஸின் இந்த அறிவிப்பு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வருகைக்காக அடுத்தப்பட்ட பணிகளை தொடங்கிவிட்டதாகவும் சில பேச்சுகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+