சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு! காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்! களமிறங்கும் 2 தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பொருளாதார வல்லுனர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.

Raghuram Rajan and Arvind Subramaniam to take participate at the Tamil Nadu Global Investor Summit 2024.

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு: தமிழ்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM - டிஎன்ஜிஐஎம் ) 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டிஎன்ஜிஐஎம் 2024 முதலீட்டாளர்கள், உலக நாட்டு வல்லுனர்கள், நிர்வாக தலைகள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு ஆகும்.

தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பொருளாதார வல்லுனர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் தமிழ்நாட்டை கொண்டு செல்லும் வகையில் இந்த தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த மாநாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வெளிநாடு பயணம்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

மாநாடு விரைவில்; தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 7 மற்றும் 8ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் ஸ்டாலின் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அறிவிப்பு: இதில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு வெளியிட உள்ளது. அதாவது 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான மொத்த ப்ளூ பிரிண்ட், தமிழ்நாட்டின் கொள்கை மாற்றங்கள், சாலை கட்டுமானங்கள் என்று பல்வேறு விஷயங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

களமிறங்கும் நாடுகள்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு பல்வேறு உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதனால் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்கா
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா
UK
ஜப்பான்
தென் கொரியா
ஜெர்மனி
டென்மார்க்
சிங்கப்பூர்
தைவான் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டிற்கு பார்ட்னர் நாடுகளாக வந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+