Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே போடு.. தேர்தலில் மோடி வென்றால் "ராகு காலம்".. ராகுல் வென்றால் ராகுல் காலம்: பிரபலம் யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் தேர்தலில் 50 சதவிகிதம்தான் பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது.. தமிழ்நாட்டில் அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பாஜக வளரவில்லை என்று அதிரடி கிளப்பியிருந்த காயத்ரி ரகுராம், இப்போது மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்.
தமிழக பாஜகவை தொடர்ந்து விமர்சித்து கொண்டிருக்கிறார், அதிருப்திக்கு ஆளான காயத்ரி ரகுராம்.. மேலும், தலைவர் அண்ணாமலையை அவ்வப்போது வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறார்.

 Ragu Kalam if modi wins in 2024, Rahul Kalam and Gayathri Raghuram criticized BJP

அண்ணாமலை மீதான காழ்ப்புணர்ச்சியை, தன்னுடைய ட்வீட்டில் தொடர்ந்து பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்று என்றாலும், பிரதமர் மோடி குறித்து, இவர் சில நாட்களுக்கு வெளியிட்டிருந்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. சமீபத்தில், ஒரு சேனலுக்கு காயத்ரி பேட்டி தந்தபோது, "உங்களைப்போலவே எஸ்வி சேகரும் அண்ணாமலையை எதிர்க்கிறார். ஆனாலும் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும் என்கிறாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வாய்ப்புகள்: அதற்கு காயத்ரி, "50 சதவிகிதம்தான் பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது. மிச்சம் 50 சதவிகித வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்வேன். வடக்கும் தெற்கும் ஒன்று கிடையாது.. பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாமே வேறு மாதிரியாக இருக்கின்றன. தெற்கு பேசும் சமத்துவ பாதையை வடக்கு புரிந்துகொள்கிறதா என்றே தெரியவில்லை" என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் 4 மாநில தேர்தல் ரிசல்ட் வெளியானது. இதில் தெலுங்கானாவில் காங்கிரசும், மற்ற 3 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றியால், பாஜக தரப்பினர் பூரிப்படைந்துள்ளனர். இந்த ரிசல்ட் குறித்து காயத்ரி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

"மாநில தேர்தல்கள் மொத்த வாக்குகள்:

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ் - 1,75,64,353

பாஜக - 2,11,13,278

ராஜஸ்தான்:

காங்கிரஸ் - 1,56,66,731

பாஜக - 1,65,23,568

தெலங்கானா:

காங்கிரஸ் - 92,35,792

பாஜக - 32,57,511

சத்தீஸ்கர்:

காங்கிரஸ் - 66,02,586

பாஜக - 72,34,968

வாக்கு சதவீதம்:

சத்தீஸ்கர்:

காங்கிரஸ் 42.23%

பாஜக 46.27%

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ் 40.40%

பாஜக 48.55%

ராஜஸ்தான்:

காங்கிரஸ் 39.53%

பாஜக 41.69%

தெலங்கானா:

காங்கிரஸ் 39.40%

பாஜக 13.90%.

காங்கிரஸ் - 4.91 கோடி வாக்குகள்.

பாஜக - 4.8 கோடி வாக்குகள்.

 Ragu Kalam if modi wins in 2024, Rahul Kalam and Gayathri Raghuram criticized BJP

காங்கிரஸ்: நாடு காங்கிரஸை விரும்புகிறது என தெரிவித்துள்ள காயத்திரி ரகுராம், "கூட்டணி ஒற்றுமை பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும். அரசியல்வாதிகள், வணிகர்கள், சாமானியர்களுக்கு பாஐகவின் ஈடி மிரட்டல்கள், பாஐகவின் இந்துத்துவ என்ற பெயரில் ஊழல், கலவரங்கள், பெண்கள் துன்புறுத்தல், போதைப்பொருள், மோசடிகள், பொய்கள், முழுமையற்ற வாக்குறுதிகள் அனைத்தும் முடிவுக்கு வரும். 2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம், 2024-ல் மோடி வென்றால் அது ராகு காலம்.

காங்கிரஸ் - 4.91 கோடி
பாஜக - 4.8 கோடி

இவ்வளவு பேர் காங்கிரஸுக்கு வாக்களித்திருந்தால், சனாதன தர்மத்தால் எப்படி தோற்றார்கள்? கூட்டணி தொகுதி பங்கீடு காரணமாக அவர்கள் தோற்றனர். அது மிகவும் தெளிவாக உள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராகவோ, சனாதன தர்மத்தைப் பற்றியோ வெறுப்பை பரப்புவதில்லை. சமத்துவமின்மை மற்றும் சமூக நீதி அல்லாத குழுக்களை ஒழிக்க சில பழைய சித்தாந்தம் சக்திகள் பற்றி திமுக பேசியது. அவ்வளவுதான்" என்று பதிவிட்டிருக்கிறார் காயத்ரி.

காயத்ரி ரகுராம்: பாஜகவில் இருந்து விலகியதில் இருந்தே, காயத்ரி ரகுராம் காங்கிரஸ், திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.. சில மாதங்களுக்கு முன்பு விசிகவில் காயத்ரி இணையலாம் என்று சொன்னார்கள்.. ஆனால் இணையவில்லை.. அதேபோல திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக சொன்னார்கள்.. ஆனால், இணையவில்லை. அதுபோலவே காங்கிரஸிலும் இணைய போவதாக சொன்னார்கள். அங்கேயும் இணையவில்லை.

என்றாலும், இதுகுறித்து, ஏற்கனவே சில செய்திகள் கசிந்துள்ளன.. அதாவது பாஜகவிலிருந்து நீக்கப்பட்டபோது, தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தவும், நடந்ததை எடுத்து சொல்லவும், பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க முயன்றுள்ளார். இதற்காக வாய்ப்பு கேட்டும், கடைசிவரை அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காத விரக்தியில் நொந்து போயிருந்தார் காயத்ரி.

ஆதரவு வலை: அந்த நேரத்தில்தான், கதர் கட்சி தரப்பிலிருந்து, காயத்ரிக்கு ஆதரவு வலை வீசப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதற்கு பிறகு, இதுகுறித்த எந்த விவரமும் தெரியவில்லை.. காயத்ரியும் இதுவரை எந்த கட்சியிலும் சேரவுமில்லை. எனினும், காங்கிரஸ் திமுகவுக்கான ஆதரவு கருத்துக்களை மட்டும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதை பாஜகவும் கவனித்தே வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+