பிரதர் ஸ்டாலினை பிரிய முடியாது! TVKவை காங்கிரசில் இணைத்திடுங்கள்! விஜய்க்கு ராகுல் காந்தி நெருக்கடி?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 9 நாட்களாக வீட்டில் இருக்கிறார், பனையூர் வீட்டில் இருக்கும் அவர் இதுவரை கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. மாறாக அரசியல் ரீதியாக வேகமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
பாஜக தலைவர்களிடம் பேசிய விஜய்.. காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும் உதவி கேட்டு உள்ளார். நடிகர் விஜய் ராகுல் காந்தியிடம் நேரடியாக போன் செய்து உதவி கேட்டு உள்ளார். கடந்த இரண்டு நாட்களாக அவர் அரசியல் ரீதியாக நிறைய பேரிடம் பேசி உள்ளார். கூட இருக்கும் யாருக்கும் இந்த விவகாரத்தை கையாள தெரியவில்லை என்ற கோபம் விஜயிடம் உள்ளது.

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். அதை தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் அருண், ராஜ்மோகன், ஜான் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ஆதவ் அர்ஜுனா பிரச்னையை குறைக்காமல் கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சனையை அதிகரிக்கும் வகையில் போஸ்டுகளை செய்கிறார். தற்போது அவர் டெல்லியில் இருக்கிறார்.
குழப்பத்தில் தவெக
இப்படி அவர்கள் என்ன செய்வது என்று ஐடியா இல்லாமல் இருப்பதால் விஜய் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தவெக தாண்டி வெளியே பலரிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறாராம். வெளியே உள்ள அரசியல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கேட்டு இருக்கிறாராம். விஜய் பாஜக வழியாக சிலரிடம் பேச முயன்றார். ஆனால் அது தமிழக அரசிடம் எடுபடவில்லை. அதாவது விஜயின் தூதுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
முக்கியமாக ராகுல் காந்தி வழியாக விஜய் முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளாராம். அவர் ராகுல் காந்தியிடம் சிலர் வழியாக பேசி உள்ளார். ராகுல் காந்தியும் - விஜயும் நீண்ட கால நண்பர்கள். இதனால் இருவரும் போனில் பேசி உள்ளார்கள். அதில்.. எனக்கு உங்கள் உதவி வேண்டும்.. என்னுடைய பெயர் FIRல் வரக்கூடாது. நிலைமை கைமீறி சென்றுவிட்டது.
ஸ்டாலினிடம் பேசுங்கள்.. இதை சரி செய்ய வேண்டும்.. அதற்கான உதவிகளை செய்யுங்கள், என்று ராகுல் காந்தி வழியாக விஜய் கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஆனால் திமுக தரப்பு சட்டப்படிதான் செல்வோம்.. கட்சி பொதுச்செயலாளர் என்ற பெயரில் புஸ்ஸி ஆனந்த் மீது FIR போட்டுள்ளோம்.. சட்டப்படி கோர்ட் சொல்வதையே செய்வோம் என்று உறுதியாக உள்ளதாம்.
ராகுல் காந்தி கோரிக்கை
இதற்கு ராகுல் காந்தி உங்களுக்கு கண்டிப்பாக உதவுகிறோம். உங்களை கைது செய்யாமல் பார்த்துக்கொள்கிறோம். நாங்கள் திமுக கூட்டணியை உடைக்க முடியாது. திமுக எங்களுக்கு நெருக்கம். தேசிய அளவில் எங்களுக்காக உடன் நிற்கும் இயக்கம். இந்தியா கூட்டணி உருவாக காரணமான இயக்கம். நாங்கள் இப்போதும் உயிர்ப்புடன் இருக்க சகோதரர் ஸ்டாலின் ஒரு காரணம்.
அவரை விட்டு பிரிய முடியாது. உங்களையும் நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது. அதனால் நீங்கள் எங்களுடன் வந்துவிடுங்கள். நீங்கள் எங்களுடன் வந்து கட்சியை இணைத்து விடுங்கள். சிரஞ்சீவி அரசியல் நெருக்கடிகளை சந்தித்தார். அவர் அரசியல் செய்ய முடியாது என்று உணர்ந்த பின், எங்களுடன் இணைந்தார். நீங்களும் எங்களுடன் இணைந்துவிடுங்கள் என்று விஜயிடம் ராகுல் காந்தி கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
7. இதில் விஜய் கைதாகும் வாய்ப்புகளும் உள்ளன. விஜய்க்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவு, பெரிய அளவில் வழக்கறிஞர்கள் படை சப்போர்ட் இல்லை என்றால், கண்டிப்பாக மிக்பெரிய சட்ட சிக்கல் விஜய்க்கு ஏற்படும். இதனால் விஜய் டெல்லி ஆதரவை நாடி உள்ளாராம். இந்த விவகாரத்தை திமுகவிற்கு எதிராக திருப்பலாமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறதாம் டெல்லி. ஏதாவது ஒரு இடத்தில் இதை வைத்து திமுகவிற்கு செக் வைத்தால் அது செந்தில் பாலாஜிக்கு சரிவாக அமையும் என்பதால்.. அதற்கான திட்டத்தில் டெல்லியும் இருக்கிறதாம். இதனால் விஜய் டெல்லியுடன் கைகோர்க்கலாம் என்கிறார்கள்.
8. ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதனால் பல சட்ட ஆலோசகர்களுடன் விஜய் பேசி வருவதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications