எதிரே தோல்வி.. அதனால்தான் இப்படி.. பாஜகவுக்கு ராகுல் காந்தி "குட்டு.." ஐடி ரெய்டை சொல்கிறாரா?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மகள்-மருமகன் வீட்டில் நடைபெற்றுவரும் வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மகள் செந்தாமரை அவரது கணவர் சபரீசன் ஆகியோர் வீடு சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ளது.
இன்று காலை முதல் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான நான்கு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்டாலின் கோபம்
இவருக்கு தெரிந்தவர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனைகளால் எதுவும் செய்துவிட முடியாது. இதற்கு பயப்பட மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கண்டனம்
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கேஎஸ் அழகிரி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தி மிரட்டுகிறார்கள், அது பலிக்காது என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் தோல்வியை எதிர்கொள்ளும்போது பாஜக சமாளிக்கும் வழிமுறையே எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது என்று தெரிவித்துள்ளார்.

மறைமுக கண்டனம்
திமுக பிரமுகர்கள் வீடுகளில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிப்பதாக நேரடியாக சொல்லவில்லை என்ற போதிலும் மறைமுகமாக அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications