ஜீன்ஸ், டீ-சர்ட்.. ஐடி இளைஞர் லுக்கில் கலக்கிய ராகுல் காந்தி.. சென்னை கல்லூரியில் கலகலப்பு
சென்னை: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இன்று மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அனைவரது புருவங்களையும் உயர்த்திவிட்டார்.
நாகர்கோவிலில் இன்று பிற்பகல் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை சென்னை வந்தார்.

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட, நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
கரை வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக அரசியல்வாதிகளைப் பார்த்து பழக்கப்பட்ட தமிழக மாணவர் சூழலில், ராகுல் காந்தியின் ஆடை அலங்காரம் என்பது வித்தியாசமாகத்தான் காட்சியளித்தது. ஐடி கம்பெனிக்கு வேலைக்கு செல்ல கூடிய ஒரு இளைஞரைப் போல ஜீன்சும், டீ ஷர்ட்டையும் அணிந்து வந்திருந்தார் ராகுல் காந்தி.
நீல வண்ண ஜீன்ஸ் பேண்ட், அடர் வண்ண டி-ஷர்ட்டில் ராகுல் காந்தி மிகவும் இளைஞரைப் போல காணப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒருவர் இவ்வளவு எளிமையாக பழகியதை பார்த்து மாணவிகளே சற்று ஆச்சரியம் அடைந்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
ராகுல் காந்தி பொதுவாக வெள்ளை நிற குர்தா அணிந்து கொண்டு பிரச்சாரங்களில் பங்கேற்று உள்ளதைப் பார்த்து உள்ளார்கள் தமிழக மக்கள். ஆனால் கல்லூரி மாணவரை போலவே ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அசத்திவிட்டார் ராகுல் காந்தி.
வழக்கத்தை விட அவரது முகத்தில் மிகுந்த உற்சாகமும் காணப்பட்டது. தனது உரையாடலின்போது தனக்கே உரித்தான பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை சரமாரியாக விமர்சனம் செய்யவும் அவர் தயங்கவில்லை. ராகுல் காந்தியின் இந்த கெட்அப் மற்றும் உரையாடல் இளம்பெண்கள் மத்தியில் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications