அப்படி ஒரு முடிவை எடுக்காதீங்க.. அரசியலுக்கே சிக்கல் வரும்.. விஜயிடம் போனில் பேசிய ராகுல் காந்தி?
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய்-யிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக - பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தமிழக வெற்றிக் கழகம் இணைய வேண்டாம் என அவர் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் விஜயை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருகிறதாம். அதன்படி விஜய்க்கு எதிராக கரூர் சிபிஐ வழக்கு உள்ளது. வருமான வரி வழக்கும் உள்ளது. இந்த வழக்குகளின் மூலம் பிரஸர் கொடுப்பது மட்டுமன்றி.. விஜய்க்கு துணை முதல்வர் பதவிக்கான ஆசையை காட்டி விஜயை உள்ளே இழுக்க பாஜக முயன்று வருகிறதாம்.

விஜயுடன் பாஜக பேச்சுவார்த்தை
விஜயுடன் டெல்லியை சேர்ந்த பிரபல தமிழ்நாட்டு வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனைகளை செய்து வருகிறாராம். விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான தீவிரமான பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, டெல்லி தலைவர்கள் தமிழக வெற்றி கழக (TVK) நிறுவனர் விஜய்யுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் வழக்கறிஞர் ஒருவர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. விஜய்யை துணை முதல்வர் வேட்பாளராக நிலைநிறுத்தும் வகையில் ஏற்பாடுகளை பாஜக டெல்லி தரப்பு செய்யத் தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது. அந்த வழக்கறிஞர் மட்டுமே விஜயை சந்தித்து வருகிறாராம். தேசிய அரசியல் வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த வழக்கறிஞர், கூட்டணி அமைந்தாலும் விஜய் தனது தனித்துவமான அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி பேச்சு
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய்-யிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களின் தகவல்படி, என்.டி.ஏ. கூட்டணியில் இணைவது விஜய்யின் அரசியல் பிம்பத்தையும், தமிழக மக்களிடையே அவரது நம்பகத்தன்மையையும் நீண்ட கால அடிப்படையில் பாதிக்கலாம் என்று ராகுல் காந்தி விஜயிடம் கூறியதாக தெரிகிறது. இத்தகைய நடவடிக்கை விஜயின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும்.. முக்கியமாக சிறுபான்மையினர் இடையே அவருக்கான மதிப்பை பாதிக்கும் என்று ராகுல் காந்தி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியான பின்னரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் விஜய், தேர்தல்களுக்கு முன்னதாக தனது அரசியல் பாதை குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்று நம்பப்படுகிறது.
ராகுல் காந்தி சொன்னது என்ன?
புதிய காட்சிகள் கூட்டணி வைப்பது சரிதான்.. ஆனால் நீட் எதிர்க்கும் நீங்கள்.. இந்தி திணிப்பை எதிர்க்கும் நீங்கள்.. பாசிச ஆதிக்கத்தை எதிர்க்கும் நீங்கள் பாஜக உள்ள கூட்டணியில் இணைய கூடாது.. குறுகிய கால அரசியல் ஆதாயங்கள் நீண்ட கால அரசியல் திட்டங்களுக்கும் மரியாதைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று ராகுல் காந்தி விஜய்யிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல மாநில அரசியல் தலைவர்கள் பாஜகவுடன் கைகோர்த்த பிறகு மக்கள் நம்பிக்கையை இழந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருவரும் இது தொடர்பாக போனில் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. ராகுலின் ஆலோசனையை விஜய் கேட்டறிந்ததாகவும், எந்தவொரு பெரிய கூட்டணி முடிவையும் எடுப்பதற்கு முன் தனது கட்சியின் அடித்தளத்தை வலுவாக உருவாக்க விரும்புவதாகவும், மக்களின் மனநிலையை அறிந்த பின்பே முடிவு எடுக்க விரும்புவதாகவும் விஜய் ராகுல் காந்தியிடம் பட்டும்படாமல் கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications