ராகுல் காந்தி தமிழகத்தில் நடைபயணம்! வரவேற்பு டூ உணவு வரை 18 குழுக்கள் அமைப்பு! யாருக்கு என்ன பணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் வரவேற்பு முதல் உணவு வரை கவனித்துக் கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் வசந்த், ஜோதிமணி, மயூரா ஜெயக்குமார், வழக்கறிஞர் சுதா உட்பட ஒவ்வொரு பிரமுகர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பை ஒதுக்கியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

நம்பிக்கை நட்சத்திரம்

நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தி, வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாள் 'இந்திய ஒற்றுமை பயணம்' மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த கீழ்கண்டவர்கள் தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி., அவர்கள் மேற்பார்வையில் செயல்படும். குழு உறுப்பினர்கள் பட்டியல் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் வசந்த்

விஜய் வசந்த்

1. வரவேற்புக் குழு திரு. விஜய் வசந்த், எம்பி

2. தங்கும் வசதி ஏற்பாட்டுக் குழு செல்வி. எஸ். ஜோதிமணி, எம்பி

3. பொதுக்கூட்ட ஏற்பாட்டு குழு டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்பி

4. நிகழ்ச்சி கண்காணிப்பு குழு டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன்

5. மக்கள் தொடர்பு குழு திரு. சி.டி.மெய்யப்பன்

மயூரா ஜெயக்குமார்

மயூரா ஜெயக்குமார்

6. நடைபயண அலங்கார குழு திரு. கிறிஸ்டோபர் திலக்

7. மக்களை திரட்டும் குழு திரு. மயூரா எஸ். ஜெயக்குமார்

8. விளம்பர பொருட்கள் விநியோக குழு டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத், எம்.பி.,

9. நிதிக் குழு டாக்டர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

10. ஊடகம் மற்றும் விளம்பர குழு திரு. ஆ. கோபண்ணா

சுதா ராமகிருஷ்ணன்

சுதா ராமகிருஷ்ணன்

11. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு திரு. பொன். கிருஷ்ணமூர்த்தி

12. போக்குவரத்து குழு திரு. கீழானூர் ராஜேந்திரன்

13. மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு திரு. செங்கம் ஜி. குமார்

14. முன்னணி அமைப்புகள் ஒருங்கிணைப்பு குழு வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன்

15. துறைகள் மற்றும் பிரிவுகள் ஒருங்கிணைப்பு குழு திரு. எம்.பி. ரஞ்சன் குமார்

 உணவுக் குழு

உணவுக் குழு

16. சமூக ஊடக குழு திரு. க.தி. லஷ்மி காந்தன்

17. அரசு அனுமதி பெரும் குழு வழக்கறிஞர் சந்திரமோகன்

18. உணவு குழு திரு. எஸ். பவன் குமார். மேற்கண்டவாறு ஒவ்வொரு பொறுப்பையும் ஒவ்வொருவருக்கு வழங்கி குழு அமைத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+