செல்வப்பெருந்தகையிடம் ராகுல் காந்தி கேட்ட அந்த கேள்வி! "கெடுத்துட்டீங்களே"! விஜய் விழாவுக்கு வர்றாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து சாதனை படைத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி விஜய் காத்திருக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காட்டிய அதிருப்தி தவெகவிற்கான ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. என்னதான் நடக்கிறது தவெகவில்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு பெரிய முன்னிலையைப் பெற்றிருக்கிறது. 35 சதவீத வாக்குகளோடு 108 தொகுதிகளில் தவெக வென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rahul gandhi news selvaperunthagai issue vijay politics tvk party update tamil nadu election 2026 congress decision 2026

ஆனாலும், ஆட்சி அமைக்க இன்னும் 12 எம்.எல்.ஏ-க்கள் தேவை. இந்த 12 பேரை பிடிக்க விஜய் என்ன செய்யப்போகிறார், அவருக்கு யார் ஆதரவு தரப்போகிறார்கள் என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

யார் அந்த 12 பேர்? தவெக போடும் கணக்கு

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே விஜய்க்கு ஆதரவு தர வாய்ப்பில்லை. இதனால் சிறிய கட்சிகளைத் தனது பக்கம் இழுக்க விஜய் தரப்பு ஸ்கெட்ச் போட்டு வருகிறது. குறிப்பாக, 4 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள பாமகவிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

சவுமியா அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஆதரவு தர பாமக தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று பனையூர் அலுவலகத்தில் நடக்கும் பாமக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இதுகுறித்த ஒரு தெளிவு கிடைக்கலாம்.

ராகுல் காந்தி - செல்வப்பெருந்தகை

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு விஜய்க்கு மிக முக்கியம். ஆனால் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இப்போதே விரிசல் விழ ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.. காரணம், கூட்டணி தலைவர்கள், ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.. ஆனால் காங்கிரஸ் மட்டும் சென்று பார்க்கவில்லை என்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

தேர்தலில் செல்வப்பெருந்தகை தோற்றதுமே, ராகுல் காந்தி அவருக்கு போன் போட்டு செம டோஸ் விட்டதாக நக்கீரன் பிரகாஷ் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

செல்வப்பெருந்தகை

"பெரிய வாய்ப்பு வந்தும் கோட்டை விட்டுட்டீங்க.. நாம தவெக கூட போயிருந்தா இன்னைக்கு 30, 40 சீட் ஜெயிச்சு பவர்ல இருந்திருக்கலாம். இந்த வாய்ப்பை கெடுத்ததே நீங்க எல்லாரும்தான்.. (செல்வப்பெருந்தகை கார்கே, சோனியா, பிரியங்கா) நீங்க பேசிதான் ஸ்டாலின் கூட அலையன்ஸ் பிக்ஸ் பண்ணீங்க.. இப்போ என்ன ஆச்சு?" என்று ராகுல் காந்தி சத்தம் போட்டாராம்..

அதாவது திமுக-வை நம்பி நின்றதால் தான் காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்ற கோபம் டெல்லி மேலிடத்திற்கு வந்துவிட்டது. அதன் வெளிப்பாடாகத்தான், இப்போதே விஜய்க்கு ஆதரவு தர காங்கிரஸ் முன்வந்துள்ளதாகச் செய்திகள் கசிகிறது.

காங்கிரஸ் போட்ட கறார் கண்டிஷன்

இதன்விளைவாக, காங்கிரஸ் ஆதரவு தர ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாம். "மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டும் தான் தவெக பக்கம் இருக்க வேண்டும், அதிமுக கூட்டணியில் உள்ள யாரையும் சேர்க்கக்கூடாது" என்பதுதான் அது. ஆதரவு தரும் பட்சத்தில் மேலூர் பெ.விஸ்வநாதன், கிள்ளியூர் ராஜேஷ் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

விஜய்யின் அடுத்த மூவ்

காங்கிரஸ், பாமக, அமமுக என இவர்கள் எல்லோரும் சேர்ந்தாலும் இன்னும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் மெஜாரிட்டி பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ஆட்சி அமைக்க விஜய் முடிவெடுத்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, ராகுல் காந்தியை, தனது பதவியேற்பு விழாவுக்கு விஜய் அழைத்துள்ளாராம்..

காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்தை இன்று கொடுத்துவிட்டால், அடுத்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இழுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து இன்று மாலைக்குள் கிட்டத்தட்ட இதற்கு முடிவு தெரிந்துவிடலாம்.. அதனால் தமிழக அரசியலில் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+