“டிராமா முடிஞ்சுபோச்சு.. மோடி கேம் ஓவர்!” - சென்னையில் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "டெல்லியில் இன்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். பாஜக தங்களின் குண்டர்களைக் களமிறக்கி மாணவர்களைத் தாக்குகிறது. 15 ஆண்டுகளாக நடந்துவரும் டிராமா முடிந்துவிட்டது. அவருடைய கேம் ஓவர் என்பது மோடிக்கு இன்னும் புரியவில்லை" எனப் பேசியுள்ளார் ராகுல் காந்தி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று சென்னை வருகை தந்தார்.

Rahul Gandhi Slams BJP

சென்னை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் இல்லத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அதைத் தொடர்ந்து, இருவரும் தனியே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், இருவரும் ஒரே காரில் பயணித்து பாலவாக்கத்தில் உள்ள பிரபல கஃபேவுக்கு சென்றனர்.

அதைத்தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றார் ராகுல் காந்தி. இந்த நிகழ்வில் ராகுல் பேசுகையில், "ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும்போதும் உங்களிடமிருந்து புதிதாக ஒன்றைக் கற்றுச் செல்கிறேன். விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும், கேள்வி கேட்கும் ஞானமும்தான் மாணவர்களின் பலம். கேள்வி கேட்காமல் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியாது.

மோடி அரசு தமிழ் கலாsசாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது. மோடியும் அமித் ஷாவும் புதிய கல்விக் கொள்கையின் வழியாக மொழியை உங்கள் மீது திணிக்க நினைக்கின்றனர். தமிழ்நாட்டின் 70 சதவிகித மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் மூலம் மோடியும் அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை பல்கலைக்கழகங்களுக்குள் நுழைக்க முயற்சிக்கின்றனர்.

மோடி, ஜனநாயகத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்துகிறார். மக்களின் குரலை ஒடுக்குகிறார். டெல்லியில் இன்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். பாஜக தங்களின் குண்டர்களைக் களமிறக்கி மாணவர்களைத் தாக்குகிறது. 15 ஆண்டுகளாக நடந்துவரும் டிராமா முடிந்துவிட்டது. அவருடைய கேம் ஓவர் என்பது மோடிக்கு இன்னும் புரியவில்லை" எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+