அக்டோபரில் சென்னை வருகிறார் ராகுல் காந்தி.. விஜய்க்கு தரப்போகும் மறைமுக பிரஷர்.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அக்டோபர் மாதம் சென்னைக்கு வருகை தரவிருக்கிறார். கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறியும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டு வருகிறது.

rahul gandhi vijay

மாணவர்களின் குரல் நிகழ்ச்சி

இந்தியாவின் தற்போதைய கல்வி முறையில் மாணவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள், வேலைவாய்ப்பின்மை மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகளை மையமாகக் கொண்டு, வட மாநிலங்களில் 'மாணவர்களின் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை ராகுல் காந்தி தீவிரமாக நடத்தி வருகிறார். கோட்டா, புனே, இந்தூர் போன்ற நகரங்களில் இந்த முயற்சிக்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதேபோல, தென் மாநிலமான தமிழகத்திலும் மாணவர்களுடன் விரிவான ஒரு சந்திப்பை நடத்த ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சி எங்கு, எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க, தனது சிறப்புப் பாதுகாப்புச் செயலாளர் பைஜுவை சென்னைக்கு அவர் அனுப்பி வைத்தார்.

சத்யமூர்த்தி பவனில் தீவிர ஆலோசனை

ராகுல் காந்தியின் வருகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

நிகழ்ச்சியை அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தலாமா அல்லது தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் நடத்தலாமா என்பது பற்றிப் பேசப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான அண்ணாசாலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காமராஜர் அரங்கம் அல்லது அதனையொட்டியுள்ள மைதானத்தில் வைத்தால் மாணவர்கள் அதிகளவில் வர வசதியாக இருக்கும் என்றும் சிலர் யோசனை தெரிவித்தனர்.

இடைத்தேர்தல் பரபரப்பும் புதிய தேதிகளும்

அதே வேளையில், அக்டோபர் முதல் வாரத்தில் இடைத்தேர்தல் பணிகள் நடப்பதால், அரசியல் கவனம் முழுவதும் அதன் பக்கமே திரும்பியிருக்கும் என்று சில நிர்வாகிகள் குறிப்பிட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் பரபரப்புகள் முடிந்த பிறகு, அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் அமைதியான சூழலில் நடத்துவதே சிறப்பாக இருக்கும் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தின் முடிவில் அக்டோபர் 3, 11, 18 மற்றும் 25 ஆகிய நான்கு தேதிகள் உத்தேசமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தியின் முடிவுக்காகக் காத்திருப்பு

இந்த நான்கு தேதிகள் அடங்கிய பட்டியல் உடனடியாக ராகுல் காந்தியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்தத் தேதிகளில் ராகுல் காந்தியின் பிற பயணத் திட்டங்களை ஆராய்ந்து, அவர் எந்தத் தேதியைத் தேர்வு செய்கிறாரோ, அன்றைய தினமே சென்னையில் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நடைபெறும் என சத்யமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்களது கருத்துகளையும் கல்விமுறை மீதான புகார்களையும் வெளிப்படையாகப் பேச இந்த மேடை உதவும் என்பதால், அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் ராகுல் காந்தியின் சென்னை பயணம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+